ரோகித் செய்ய வேண்டியதை செய்த ஸ்டோக்ஸ்.. மீண்டும் காப்பாற்றும் ஜெய்ஸ்வால்.. புதிய சாதனை நோக்கி பயணம்

0
201
Jaiswal

ராஞ்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில், முதலில் பெரிய நெருக்கடியில் சிக்கிய இங்கிலாந்து இறுதியாக 353 ரன்கள் எடுத்து தப்பியது.

அதே சமயத்தில் இந்திய அணி எடுத்ததுமே மோசமாக ஆரம்பித்து இருக்கிறது. இன்றைய நாளில் எஞ்சி இருந்த மூன்று விக்கெட்டுகளையும் 51 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி இழந்து 350 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. இந்திய தரப்பில் ஜடேஜா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் மோசமான முறையில் ஆண்டர்சன் பந்துவீச்சில் தனது விக்கெட்டை 25 ரன்களுக்கு தந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் நம்பிக்கை அளித்தார்கள். ஆனால் கில் எதிர்பாராத விதமாக 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதார்இந்த போட்டியிலும் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இரண்டு சிக்ஸர்கள் மூலம் அதிரடியாக ஆரம்பித்த ஜடேஜா, அந்த 12 ரன்கள் உடன் அவரும் வெளியேறினார்.

- Advertisement -

இந்த மூன்று விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணியின் ஆப் ஸ்பின்னர் சோயப் பஷீர் கைப்பற்றி அசத்தினார். பந்து விரிசல்களில் பட்டு பெரிதாக திரும்ப இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம் அடைந்தார்கள்.

ஆனாலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தாக்குதல் முறையில் பீல்டிங்கை அமைத்து பந்துவீச்சாளருக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தார். குறிப்பாக பேட்மேனுக்கு அருகில் ஹெல்மெட்டோடு பீல்டரை நிற்க வைத்து நெருக்கடி கொடுத்தார். இந்த வகையில் ஜடேஜா விக்கெட்டை கைப்பற்றினார். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை நம்பி இப்படியான பீல்டிங் செட்டப்பை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் அவுட் இல்லையா ஏத்துக்கவே மாட்டேன்.. அடம் பிடித்த பென் ஸ்டோக்ஸ்.. ரோகித் பெருந்தன்மை

இந்த நிலையில் ஒரு முனையில் நின்று சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் இந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். தற்பொழுது தேனீர் இடைவேளையில் ஜெயஸ்வால் 54 ரன்கள், சர்ப்ராஸ் கான் ஒரு ரன் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு தற்பொழுது 131 ரன்கள் எடுத்திருக்கிறது.