17 வருட ஐபிஎல் வரலாறு.. எந்த வீரரும் செய்யாத சாதனை.. ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடி ரெக்கார்டு

0
201
Fraser

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் சொந்த மைதானத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் சாதனையைப் படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு உறுதியான நிலையில், டெல்லி அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த 22 வயதான வலது கை பேட்ஸ்மேன் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடி ஆட்டத்தில் அசத்தினார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறந்தன. அவரை எப்படி கட்டுப்படுத்துவது என ராஜஸ்தான் கேப்டனுக்கும் புரியவில்லை.

போட்டியில் நான்காவது ஓவர் முடிவில் ஜாப் பிரேசர் அதிரடியாக 19 பந்தில் சதம் அடித்தார். அடுத்து சந்தித்த இருபதாவது பந்தில் ஆட்டம் இழந்தார். இதில் மொத்தம் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடக்கம். இந்த அரை சதத்தின் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் ஒரு மெகா சாதனையை படைத்திருக்கிறார்.

17 வருடமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், எந்த ஒரு பேட்ஸ் மேடம் ஒரு சீசனில் மூன்று முறை 20 பந்துக்கும் குறைவாக அரை சதம் அடித்தது கிடையாது. ஆனால் ஜாக் பிரேசர் முதல் வீரராக 20 பந்துகளுக்குள் மூன்று முறை ஒரே ஐபிஎல் சீசனில் அரை சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : வாய்ப்பு கிடைக்காதது வெறுப்பாகத்தான் இருக்கும்.. ஆனால் இந்த விஷயம் முக்கியமானது – சிஎஸ்கே சான்ட்னர் பேச்சு

ஹைதராபாத் அணிக்கு எதிராக 15 பந்துகளிலும், மும்பை அணிக்கு எதிராக 15 பந்துகளிலும், தற்போது ராஜஸ்தான் அணிக்கு எதிராக 19 பந்துகளிலும் அதிரடி அரைசதம் அடித்திருக்கிறார். நடப்பு 7 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் நான்கு அரைசதங்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக முன்பு டெல்லிக்கு எதிராக 27 பந்தில் 84 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.