வாய்ப்பு கிடைக்காதது வெறுப்பாகத்தான் இருக்கும்.. ஆனால் இந்த விஷயம் முக்கியமானது – சிஎஸ்கே சான்ட்னர் பேச்சு

0
3312
Santner

ஐபிஎல் தொடரில் திறமை இருந்தும் விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்களில் மிகவும் முக்கியமானவர் நியூசிலாந்தின் இடது கை சுழல் பந்துவீச்சாளர் மிட்சல் சான்ட்னர். தற்போது சிஎஸ்கே அணியின் விளையாடி வரும் அவர் இது குறித்து பேசி இருக்கிறார்.

மிட்சல் சான்ட்னர் 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியால் 50 லட்சம் ரூபாய்க்கு முதல் முறையாக வாங்கப்பட்டார். அவருக்கு முதல் ஐபிஎல் தொடரும் அதுதான். இதற்கடுத்து 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 1.90 கோடிக்கு மீண்டும் சிஎஸ்கே அணியால் வழங்கப்பட்டார். மொத்தம் ஏழு வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இதில் முதல் வருடமான 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அவருக்கு சிஎஸ்கே அணியால் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் ஏழு சீசங்களாக விளையாடி வரும் அவர் இதுவரையில் மொத்தம் 16 ஐபிஎல் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வாய்ப்பாக கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக களம் இறக்கப்பட்டார். பவர் பிளேவிலேயே பந்துவீச்சை முதல் ஓவரில் தொடங்கிய அவர் மூன்று ஓவர்களுக்கு 10 ரன் மட்டும் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். மிகச் சிறப்பாக பந்து வீசிய இந்த போட்டியில் கூட அவரை தொடர்ந்து நான்கு ஓவர்கள் பந்து வீச வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் பேசும் பொழுது “உண்மையில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதுதான் பெரிய சவாலான நேரமாக இருக்கும். சில சமயங்களில் அது வெறுப்பாகவும் இருக்க செய்யும். நீங்கள் விளையாடாத பொழுது வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் நான் செய்வது, மற்ற வீரர்களுக்கு உதவி செய்வதைதான். பயிற்சியின்போது அல்லது வேறு நேரங்களில் வீரர்களுடன் நிறைய உரையாடலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித்தை அப்படியொரு நிலைமையில பார்த்தேன்.. அவருக்கு நிச்சயம் இது தேவைப்படலாம் – மைக்கேல் கிளார்க் கவலை

உங்கள் அணிக்கு நீங்கள் விளையாடுவதற்கு உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வாய்ப்புகள் வரலாம். ஐபிஎல் ஒரு நீண்ட தொடர். நான் இரண்டு போட்டியில்தான் விளையாடுகிறேன் என்றாலும் கூட, அந்த இரண்டு போட்டிகளிலும் நான் என்னால் முடிந்ததை செய்ய வேண்டும். அது அணியின் வெற்றிக்கு உதவுகிறது என்பதில் நான் எப்பொழுதும் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.