ரோகித்தை அப்படியொரு நிலைமையில பார்த்தேன்.. அவருக்கு நிச்சயம் இது தேவைப்படலாம் – மைக்கேல் கிளார்க் கவலை

0
477
Rohit

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்கிறார். தற்போது மைக்கேல் கிளாஸ்க் ரோஹித் சர்மா குறித்து சில கவலைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக கடந்த எட்டு ஆண்டுகளில் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஒருமுறை மட்டுமே 400 ரன்கள் தாண்டி இருக்கிறார். மேலும் 17 ஆண்டுகால ஐபிஎல் தொடரில் அவர் ஒரு முறை மட்டுமே 500 ரன்களை தாண்டி இருக்கிறார். அவருக்கு ஐபிஎல் தொடர் பெரிய அளவில் பேட்டிங்கில் சென்றது கிடையாது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு அவருக்கு குறிப்பிடும்படி டி20 உலகக்கோப்பை தொடர் அமையவில்லை. மேலும் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் பேட்ஸ்மேனாக சுமக்க இடத்தில் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவருக்கு ஒரு சுமாரான சீசன் ஆகவே இருக்கிறது. தற்பொழுது இது குறித்து மைக்கேல் கிளார்க் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது “என்னுடைய பார்வையில் ரோஹித் சர்மாவும் கொஞ்சம் சோர்வாக இருக்கலாம். அவருக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்ததின் மூலமாக அவர் ஏதாவது அற்புதங்களை நிகழ்த்தலாம். ஆனால் இந்திய கேப்டன் மற்றும் மும்பை இந்தியன் அணியின் முக்கிய வீரராக இருப்பதால் அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து விளையாடுகிறார். அவர் தன்னுடைய பார்மை கண்டுபிடிக்க வேண்டும்.

கடைசி ஆட்டத்திற்கு முந்தைய நாள் அவருடைய முதுகுப் பகுதியில் பிடிப்புகள் இருந்தது. அப்படியான சமயத்தில் அவரை நான் வலைப்பயிற்சியில் பார்த்தேன். அவர் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இது ஒரு நல்ல அறிகுறி. அவர் போராடுவது போல தெரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : நட்சத்திரங்கள் கிடையாது.. இந்த 2 வீரர்கள்தான் டி20 உ.கோ-யை ஜெயிச்சு தருவாங்க – ரவி சாஸ்திரி பேட்டி

ரோகித் போன்ற ஒருவர் தன்னுடைய பார்மை கண்டுபிடிப்பதற்கு சிறிது நேரமே ஆகும். அவர் அழுத்தத்தை விட்டு தன் ஆட்டத்தில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன். ஏனென்றால் அவர் மிகச்சிறந்த வீரர். அவர் பந்தை கடுமையாக அடிக்க முயற்சி செய்வதை விட்டு டைமிங் செய்யக்கூடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன். எனவே அவர் சீக்கிரத்தில் தன் பார்முக்கு வந்துவிடுவார்” எனக் கூறியிருக்கிறார்.