ஜெய்ஸ்வால் அவுட் இல்லையா ஏத்துக்கவே மாட்டேன்.. அடம் பிடித்த பென் ஸ்டோக்ஸ்.. ரோகித் பெருந்தன்மை

0
1159
Stokes

ஜார்க்கண்ட் ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில், இப்போது வரை இங்கிலாந்து அணி வலிமையான இடத்தில் இருக்கிறது.

இந்த போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் பந்து திடீரென தாழ்வாக செல்வது பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனையை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் இந்த பிரச்சனை நாளாக நாளாக இன்னும் அதிகரிக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த போட்டியில் நான்காவது இன்னிங்ஸை கடைசியில் விளையாட வேண்டிய இடத்தில் இந்திய அணி இருக்கிறது. எனவே இங்கிலாந்து தற்பொழுது எடுத்திருக்கும் 353 ரன்களை தாண்டி பெரிய ரன்களை இந்திய அணி எடுக்க வேண்டும்.

இந்திய அணி பெரிய ரன்கள் எடுக்காவிட்டால் கடைசியில் இங்கிலாந்து அணி 250 ரன்கள் டார்கெட் கொடுத்தால் கூட அதை எட்டுவது என்பது கடினமாக இருக்கும். இந்தத் தொடரில் முதல் போட்டியில் ஹைதராபாத்தில் இந்திய அணிக்கு இப்படித்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் துவங்கி விளையாடி வருகிறது. ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே வெளியேறிவிட, நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நிலைத்து நின்று விளையாடிய சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்து எதிர் பாராமல் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

தற்போது ஒரு முனையில் நின்று இளம்வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகிறார். ஜெயஸ்வாலுக்கு ராபின்சன் வீசிய பந்து ஒன்றில் எட்ஜ் எடுத்து பந்து கீப்பரின் கைகளுக்கு சென்றது. சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த காரணத்தினால் நடுவர்கள் மூன்றாவது நடுவரிடம் சென்றார்கள். ஆனால் அதற்குள்ளாகவே பென் ஸ்டோக்ஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் வீடியோவில் திரும்ப பார்க்கும் பொழுது பந்து தரையில் கொஞ்சம் பட்டு எழுந்தது தெரிய வந்தது. எனவே மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என முடிவு செய்து தீர்ப்பளித்தார். ஆனால் களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் இது அவுட் இல்லையா? என்பது போல பெரிய ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து மொத்த இங்கிலாந்து அணியும் ஏமாற்றத்தையே வெளிப்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது.

இதையும் படிங்க : “விராட் கோலி இருந்திருந்தா கதையே வேற.. ரோகித் சரிப்பட்டு வர மாட்டாரு” – தினேஷ் கார்த்திக் பேச்சு

இன்று இதே போல் ஜோ ரூட்டுக்கு குல்தீப் பந்தில் எட்ஜ் எடுத்து ரோகித் சர்மா கேட்ச் பிடித்த பொழுது, பந்து தரையில் பட்டுவிட்டது என கூறி, சந்தேகம் இருந்தால் மூன்றாவது நடுவர் இடம் செல்லுங்கள் என்று பெருந்தன்மையாக நடந்து கொண்டார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் இதற்கு அப்படியே எதிர் மாறாக நடந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.