2024 ஐபிஎல்.. சிறந்த கேப்டன் கம்மின்ஸ் கிடையாது.. இந்த இந்திய வீரர்தான் – ஸ்டீவ் ஸ்மித் தேர்வு

0
16924
Cummins

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக, அந்த அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் அனுபவம் வாய்ந்த கேப்டன் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு ருதுராஜ் புதிய கேப்டனாக வந்தார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் கொண்ட கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே தற்பொழுது இருக்கிறார். இவர்களில் தற்போது யார் சிறந்த கேப்டன் என்பதை ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் ஸ்மித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெரிய அனுபவம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மற்றும் அவரைவிட கேப்டன் பொறுப்பில் அதிக ஆண்டுகள் அனுபவம் கொண்ட மகேந்திர சிங் தோனி இருவருமே கேப்டனாக இல்லாமல் இருக்கின்ற காரணத்தினால், நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டனாக இளம் இந்திய வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் இரண்டு வெளிநாட்டு கேப்டனாக ஆர்சிபி அணிக்கு பாப் டு பிளிசிஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் இருவரும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இடம் ரிஷப் பண்ட் மற்றும் பாப் டு பிளிசிஸ் இருவரையும் வைத்து யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அவர் யோசிக்காமல் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுத்தார்.

இதற்கு அடுத்து ரிஷப் பண்ட் உடன் ருத்ராஜ் மற்றும் ஷிகர் தவன் இருவரையும் வைத்துயார் சிறந்த கேப்டன்? என்று கேட்கப்பட்டது. இதற்கு ஸ்மித் மீண்டும் ரிஷப் பண்ட்டை சிறந்த கேப்டனாக தேர்ந்தெடுத்தார். இதற்கு அடுத்து ரிஷப் பண்ட் உடன் கம்மின்சை வைத்து கேட்கப்பட்டதற்கு ஸ்மித் யோசிக்காமல் கம்மின்ஸை தேர்வு செய்தார்.

இதற்கு அடுத்து கம்மின்ஸ் உடன் கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை வைத்து கேட்கப்பட்டது. இதற்கும் ஸ்மித் சிறந்த கேப்டனாக கம்மின்சை தேர்வு செய்தார். இறுதியாக கம்மின்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையும் வைத்து யார் சிறந்த கேப்டன்? என்ற கேள்விக்கு ஸ்மித் சிறிது யோசித்து விட்டு சஞ்சு சாம்சனை நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டனாக தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 125 டு 183.. கிங் விராட் கோலி தெறி சதம்.. கடைசி 6 ஓவரில் நடந்த டுவிஸ்ட்.. ஆர்சிபி ராஜஸ்தானுக்கு எதிராக ரன் குவிப்பு

தற்போது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை உருவாக்கியதில் சஞ்சு சாம்சங் பங்கும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.