125 டு 183.. கிங் விராட் கோலி தெறி சதம்.. கடைசி 6 ஓவரில் நடந்த டுவிஸ்ட்.. ஆர்சிபி ராஜஸ்தானுக்கு எதிராக ரன் குவிப்பு

0
188
Virat

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனின் 19 வது போட்டியில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய அதே அணியுடன் தொடர்ந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தரப்பில் விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் நீக்கப்பட்டு, குஜராத்தை சேர்ந்த 23 வயதான சவுரவ் சவுகானுக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் நல்ல துவக்கம் கிடைக்காமல் தடுமாறி வந்தது. போட்டியில் அதற்கு முடிவு கட்டும் விதமாக ஆர்சிபி அணியின் விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டு பிளிசிஸ் இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள்.

இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அரைசத பார்ட்னர்ஷிப்பை கடந்ததோடு வெற்றிகரமாக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தார்கள். இறுதியாக இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவர்களில் 84 பந்துகளில் 125 ரன்கள் குவித்து பிரிந்தது. கேப்டன் பாப் டு பிளிசிஸ் 32 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உடன் 44 தங்கள் எடுத்து, சாகல் பந்தில் பட்லர் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து பெரிய எதிர்பார்ப்போடு இந்த தொடரில் சரியாக விளையாடாத பிளான் மேக்ஸ்வெல் உள்ளே வந்தார். மீண்டும் ஆர்சிபி ரசிகர்களை ஏமாற்றும் விதமாக மேக்ஸ்வெல் 3 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து பர்கர் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதற்கு அடுத்து வந்த அறிமுக வீரர் சவுரவ் சவுகான் 6 பந்தில் 9 ரன்கள் எடுத்து சாகல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி 67 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவருக்கு இது ஐபிஎல் தொடரில் எட்டாவது சதம் ஆகும். மேலும் அவரே ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார். இறுதிவரை களத்தில் நின்ற விராட் கோலி 72 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க : ஆர்சிபி அணிக்கு அறிமுகமான அகமதாபாத் மைதான ஊழியரின் மகன்.. யார் இந்த சவுரவ் சவுகான்?

விராட் கோலி மற்றும் பாப் டு பிளிசிஸ் இருவரும் முதல் விக்கட்டுக்கு 14 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் கடைசி ஆறு ஓவர்களில் அந்த அணி கையில் விக்கெட் இருந்தும் 58 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் சாகல் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். சஞ்சு சாம்சன் கேப்டன்சி இன்று சிறப்பாக இருந்தது.