டி20 WC: இந்திய அணியில் இவர் இருக்கனும்..நானே சாட்சி எந்த டீமையும் அலற விடுவார் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து

0
1780

உலக கிரிக்கெட்டில் தற்போதைய சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவர். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் சிறந்தவராக இருக்க, வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக் கூடியவராக இல்லை.

இதன் காரணமாக தற்பொழுது நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் அவர் எந்த ஒரு அணிக்காகவும் விளையாட தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே அவர் ஐபிஎல் தொடரில் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையாளராக தொலைக்காட்சியில் பங்கேற்கிறார். அந்த அளவிற்கு ஐபிஎல் தொடரின் ஆதிக்கம் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரியதாக மாறியிருக்கிறது.

- Advertisement -

அதே வேளையில் ஐபிஎல் தொடர் மே மாதம் 25 ஆம் தேதிக்குள் முடிய வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அப்பொழுதுதான் ஜூன் 5ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் உலகக் கிரிக்கெட்டின் முக்கிய வீரர்கள் அனைவரும் அவரவர் அணிக்கு திரும்ப முடியும்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்னும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தனது முழு அணியை முடிவு செய்யாமல் இருக்கிறது. இன்னும் அணியின் இரண்டு விக்கெட் கீப்பர்கள் யார் என்பதே தெரியவில்லை. மேலும் பேட்டிங் யூனிட்டில் பேக்கப் பேட்ஸ்மேனாக யாரை தேர்ந்தெடுப்பார்கள்? என்பதும் சந்தேகமாக இருக்கிறது.

அவர் அழுத்தத்தை விரும்புகிறார்

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் சில நாட்களாக விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவதை இந்திய தேர்வு குழுவினர் விரும்பவில்லை என்பதான செய்திகள் பரப்பப்பட்டது. இதை யார் உருவாக்கினார்கள்? என்பது தெரியவில்லை. மேலும் 14 மாதங்களாக இந்திய t20 கிரிக்கெட் அணிகள் இடம்பெறாமல் இருந்த விராட் கோலியை இந்திய கிரிக்கெட் நிர்வாகம்தான் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் திரும்ப அழைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஸ்டீவ் ஸ்மித் “விராட் கோலி ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தது போல் விளையாடக் கூடியவர். நீங்கள் சில ஆடுகளங்களில் விளையாடும் பொழுது எவ்வளவு அதிரடியாக விளையாடுகிறார்கள் என்பது முக்கியம் கிடையாது. உங்களுக்கு முன்னால் எப்படி ஆட்ட சூழ்நிலை இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி விளையாட வேண்டும். ஐபிஎல்தொடர் மற்றும் இந்திய அணிக்காக அவர் சில பிறந்த டி20 இன்னிங்ஸ்களை விளையாடி அணியை லைனில் கொண்டு வந்திருக்கிறார். மேலும் நான் விளையாடிய பொழுதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல்-ல் பாண்டிங் பாவம்.. அவருக்கு இந்த இந்திய பையன் பெரிய தலைவலி – ஆஸி பிராட் ஹக் பேச்சு

எங்களுக்கு அவர் குறித்து தெரிந்தது என்னவென்றால், அவர் அழுத்தத்தில் சிறப்பாக செயல்படுகிறார். நீங்கள் உலகக் கோப்பைக்கு சென்று அழுத்தத்தை உணரும் பொழுது, உங்களுக்கு அழுத்தத்தை விரும்பக்கூடிய விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன் கட்டாயம் தேவை. அழுத்தமான சூழ்நிலையில் தனித்து நின்று விளையாடக்கூடிய அனுபவம் பெற்ற விராட் கோலி அணியில் இருப்பது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.