ஐபிஎல் 2024.. ப்ளே ஆஃப்க்கு முன்பே கிளம்பும் 8 இங்கிலாந்து வீரர்கள்.. பாதிக்கும் 3 அணிகள்

0
5744
England

இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து செல்ல இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்களில் எட்டு வீரர்கள் இங்கிலாந்து டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள் ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. பிளே ஆப் தொடர் மே மாதம் 21ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இந்த எட்டு வீரர்களும் மே 22 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கும் டி20 தொடருக்கு திரும்புகிறார்கள்.

- Advertisement -

ராஜஸ்தான் ஜோஸ் பட்லர், சிஎஸ்கே மொயின் அலி, கொல்கத்தா பில் சால்ட், பஞ்சாப் லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, சாம் கரன், ஆர்சிபி ரீஸ் டாப்லி, வில் ஜேக்ஸ் ஆகிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் போது விளையாட மாட்டார்கள். டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக, இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடக்க இருக்கும் டி20 தொடருக்கு திரும்புகிறார்கள்.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகள் பிளே ஆப் வாய்ப்புக்கு தகுதி பெறக்கூடிய நிலையில் இருக்கின்றன. இந்த அணிக்காக விளையாடக்கூடிய இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்புவது இந்த மூன்று அணிகளுக்கும் பெரிய பாதிப்பை உண்டு செய்யும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் இரண்டு சதங்களுடன் மிக முக்கியமான ஆட்டங்களை வென்று கொடுத்திருக்கிறார். அதே சமயத்தில் கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் 394 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை கொடுத்து வருகிறார். ஐபிஎல் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதால், சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர் மொயின் அலியின் தேவை பெரிய அளவில் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ. கோ தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. கேப்டனையே கழட்டி விட்டு.. மும்பை அதிரடி வீரருக்கு வாய்ப்பு

எனவே இந்த மூன்று அணிகளும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கும் அவசர முடிவின் காரணமாக பாதிக்கப்பட போகின்றன என்பது நிதர்சனம். அதே சமயத்தில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில் இருக்கும் இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்கள் முன்கூட்டியே அமெரிக்கா செல்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.