டி20 உ. கோ தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. கேப்டனையே கழட்டி விட்டு.. மும்பை அதிரடி வீரருக்கு வாய்ப்பு

0
13628
Ruturaj

நடப்பு 17 வது ஐபிஎல் சீசன் முடிந்து, ஜூன் மாதம் ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இன்டிசில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி, எய்டன் மார்க்ரம் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த முறை 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது பேட்டிங் ஃபார்மிலேயே இல்லாத போதும், கேப்டன் என்கின்ற காரணத்தினால் டெம்பர் பகுமா அணியில் இடம் பெற்று இருந்தார். அவருடைய மோசமான பேட்டிங் ஃபார்ம் அந்த அணியை பாதித்தது. அதே சமயத்தில் அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சிறப்பான புள்ளி விபரங்களை வைத்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் டெம்பா பவுமா இடம் பெறவில்லை. மேலும் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது டி20 உலகக் கோப்பை அதையே தொடர்ந்து இருக்கிறார்கள்.

டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணியில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான இடதுகை பேட்ஸ்மேன் ரியான் ரிக்கெல்ட்டன் இடம்பெற்று இருக்கிறார். புதிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஜெரால்டு கோட்சிக்கு இடம் தரப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இரண்டு ரிசர்வ் வீரர்களாக வேகப்பந்துவீச்சாளர்கள் நன்ரே பர்கர் மற்றும் லுங்கி நிகிடி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பேட்டிங்கில் அனுபவ வீரர்களான குயிண்டன் டி காக், டேவிட் மில்லர், ரீசா ஹென்றிக்ஸ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு சிறப்பாக விளையாடி வரும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில் அனுபவ பேட்ஸ்மேன் வான்டர் டேசன் மற்றும் இளம் பேட்ஸ்மேன் டிவால்ட் ப்ரிவியசுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ருதுராஜ் முதல் கேஎல் ராகுல் வரை.. டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்காத 6 இந்திய வீரர்கள்

2024 டி20 உலகக்கோப்பை 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி:

எய்டன் மார்க்ரம், ஒட்டினியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்சி, குயின்டன் டி காக், பார்ச்சூன், ரீசா ஹென்றிக்ஸ், மார்க்கோ யான்சன், ஹென்றி கிளாசன், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், அன்றிச் நோர்க்கியா, ரபாடா, ரியான் ரிக்கெல்ட்டன், சம்சி மற்றும் ஸ்டப்ஸ்.