ருதுராஜ் முதல் கேஎல் ராகுல் வரை.. டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்காத 6 இந்திய வீரர்கள்

0
5062
Ruturaj

நடப்பு 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இந்திய டி20 உலக கோப்பை அணியில் சிறப்பாக விளையாடியிருந்த போதிலும் கூட இடம்பெறாத ஆறு வீரர்கள் பற்றி இந்த கட்டுரை தொகுப்பில் பார்ப்போம்.

கேஎல்.ராகுல் :
நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் என பேட்டிக்கு மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் கேஎல்.ராகுலுக்கு டி20 உலகக்கோப்பை அணியில் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒன்பது போட்டிகளில் 378 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

ருதுராஜ் :
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக இந்திய அணி நடத்தியதோடு சதமும் அடித்து, நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சதத்துடன் 9 போட்டிகளில் ருதுராஜ் 447 ரன்கள் குவித்திருக்கிறார். ரிசர்வ் வீரராக கில்லுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இவரை முற்றிலுமாக புறக்கணித்தது விமர்சனம் ஆகி வருகிறது.

மயங்க் யாதவ் :
நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அதிவேகத்தால் மட்டும் அல்லாமல், பந்துவீச்சு கட்டுப்பாடு மற்றும் துல்லியத்தாலும், தனி வீரராக அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த விதத்தாலும் பெரிதும் கவனம் ஈர்க்கப்பட்டவர் ஆக இருந்தார். ஆனாலும் இவர் பந்து வீசும் முறையால் காயம் அடைவதோடு அனுபவம் இல்லாதவராக இருப்பதால், வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

ரவி பிஸ்னாய் :
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் பந்துவீச்சில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும் டி20 பந்துவீச்சாளர் பட்டியலில் அப்போது முதல் இடத்தையும் பிடித்தார். சாகலுக்கு இடம் தந்து இவரை வெளியே அனுப்பியிருக்கிறார்கள்.

- Advertisement -

ரிங்கு சிங் :
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஃபினிஷிங் இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அடுத்த தோனி என்று பலராலும் புகழப்பட்ட இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல் போனது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் இவரை தற்போது ரிசர்வ் வீரராக அணியில் இணைத்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை இந்திய அணி அறிவிப்பு.. பல ஆச்சரிய முடிவுகள்.. ரிங்கு சிங்குக்கு இடமில்லை

ரியான் பராக்:
கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதோடு, நடப்பு ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால், சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவருக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை அணியில் புதிய வீரர்கள் யாருக்குமே வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது