ஐபிஎல்-ல் பாண்டிங் பாவம்.. அவருக்கு இந்த இந்திய பையன் பெரிய தலைவலி – ஆஸி பிராட் ஹக் பேச்சு

0
196
Hogg

நாளை மறுநாள் 17வது ஐபிஎல் சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் போட்டியின் மூலமாகத் துவங்குகிறது. ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் இரண்டு பெரிய அணிகள் முதல் போட்டியில் மோதுவதால் எதிர்பார்ப்பும், போட்டிக் குறித்தான பரபரப்பும் நிலவுகிறது.

மேலும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது நாள் சனிக்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் பஞ்சாப் முல்லன்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இரண்டு அணிகளும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.

- Advertisement -

இதில் டெல்லி அணிக்கு ஆஸ்திரேலியா லெஜெண்ட் கேப்டன் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். மேலும் சாலை விபத்தில் சிக்கி கடந்த முறை ஐபிஎல் தொடரில் விளையாடாத டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த முறை அணிக்கு கேப்டனாக திரும்பி வந்திருக்கிறார். அவர் விக்கெட் கீப்பிங் செய்வாரா? என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரிக்கி பாண்டிங் சரி செய்ய வேண்டிய விஷயம்

மேலும் டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவின் பிரிதிவி ஷா மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இருவரும் இருக்கிறார்கள். கடந்த ஐபிஎல் தொடரில் பிரித்திவி ஷா பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருந்தது. இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரராக பார்க்கப்பட்ட அவர், ஐபிஎல் தொடரின் பாதியிலேயே பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

அவர் பேட்டை மேலே தூக்கிப் பிடித்து நிற்பதும், மேலும் ஷார்ட் பந்து விளையாட திணறுவதும் அவருடைய பலவீனமாக இருந்து வருகிறது. இது அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்ங்க்கு மிகச் சரியாகத் தெரியும். ஒருமுறை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது கிரிக்கெட் வர்ணனையிலிருந்து அவர் இதைத் துல்லியமாக பேசியிருந்தார். துவக்க ஆட்டக்காரராக பிரித்திவிஷா சராசரியாக விளையாடும் பொழுது, டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாட வசதியாக இருக்கும். தற்பொழுது பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்க்கு பிரித்திவி ஷா பேட்டிங் ஃபார்ம்தான் தலைவலியாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹக் கூறும்போது “பாண்டிங் முதலில் பிரித்தி விஷா பேட்டிங் பார்மைதான் பார்ப்பார். அவர் தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே சரியாக விளையாடவில்லை. அவர் தனது பேட்டிங் அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மேலும் அவர் நம்பிக்கை பெற வேண்டும்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலால் எங்க டீம் ஊழியர்கள் காயமடைகிறார்கள்.. என்ன பண்றதுனு தெரியல – சஞ்சு சாம்சன் பேச்சு

பாண்டிங் உண்மையில் பிரிதிவிஷா பேட்டிங்கில் வேலை செய்து, பேட்டிங் பவர்-பிளேதிட்டங்களை மாற்றி அமைத்து, வார்னரையும் சிறப்பாக மாற்றினால், டெல்லி மிடில் ஆர்டர் போட்டிக்குள் வந்துவிடும். இல்லையென்றால் பயிற்சியாளராக பாண்டிங் கஷ்டப்படுவார்” என்று கூறியிருக்கிறார்.