இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.
உலக கிரிக்கெட் அரங்கில் பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே சில வருடங்களாக உரசல்கள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஏஞ்சலோ மேத்தியூசை டைம் அவுட் முறையில் பங்களாதேஷ் ஆட்டம் இழக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இன்று டி20 தொடரின் முதல் போட்டி சியால்கட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு குஷால் மெண்டிஸ் 36 பந்தில் 59 ரன்கள், சதிர சமரவிக்ரமா 48 பந்தில் 61* ரன்கள், சரித் அசலங்கா 21 பந்தில் 44* ரன்கள் அதிரடியாக எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் பரப்பில் சோரிஃபுல் இஸ்லாம், டஸ்கின் அகமத், ரிசாத் ஹுசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு லிட்டன் தாஸ் 0, சௌமியா சர்க்கார் 12, கேப்டன் நஜிபுல் ஹுசைன் சாந்தோ 20, ஹ்ரிடாய் 8 என்று வரிசையாக வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து அனுபவ வீரர் மகமதுல்லா மற்றும் அறிமுக வீரர் ஜேகிர் அலி இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாடி பங்களாதேஷ் அணியை மீட்ட ஆரம்பித்தார்கள். மகமதுல்லா 31 பந்தில் 54 ரன்கள், மெகதி ஹசன் 11 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதற்கு அடுத்து கடைசி இரண்டு ஓவர்களுக்கு வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை மதிஷா பதிரனா வீச 15 ரன்கள் வந்தது. தொடர்ந்து கடைசி ஓவரில் பங்களாதேஷ் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
இலங்கை தரப்பில் கடைசி ஓவரை முன்னாள் கேப்டன் சனகா வீசினார். அந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஏழு ரன்கள் கொடுத்தார். இதற்கு அடுத்து கடைசிப் பந்தில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பங்களாதேஷ் அணி ஒருவன் மட்டுமே எடுத்தது.
20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுக்க, இலங்கை அணி பரபரப்பான போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பங்களாதேஷ் அணியை அவர்களது நாட்டில் வைத்து பழிதீர்த்து இருக்கிறது.
இதையும் படிங்க : “அஸ்வின் செஞ்ச 3 சம்பவம் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன்.. பேசி ஜெயிக்கவே முடியாது” – புஜாரா வாழ்த்து
மேலும் பங்களாதேஷ் தரப்பில் அதிரடியாக விளையாடிய ஜேகிர் அலி 34 பந்தில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இலங்கை அணியின் தரப்பில் ஏஞ்சலோ மேத்யூஸ், பினுரா பெர்னாடோ மற்றும் சனகா மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.