“அஸ்வின் செஞ்ச 3 சம்பவம் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன்.. பேசி ஜெயிக்கவே முடியாது” – புஜாரா வாழ்த்து

0
181
Ashwin

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி தரம்சாலா மைதானத்தில் மார்ச் பதினொன்றாம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த போட்டி ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நூறாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக அமைய இருக்கிறது. எனவே தொடரின் கடைசிப் போட்டிக்கு தனி எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்நாட்டில் சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாட இருக்கின்ற காரணத்தினால், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் சேர்ந்து இந்திய அணிக்காக நீண்ட காலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவரும், அவருடைய கிரிக்கெட் நண்பருமான புஜாரா, நூறாவது டெஸ்ட் விளையாடுவதற்கு தனது வாழ்க்கை தெரிவித்து இருக்கிறார்.

புஜாரா தனது வாழ்த்தில் கூறும் பொழுது “நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடும் பொழுது நீண்ட நேரம் வந்து பேசுவதற்கு உங்களுக்கு உடல் தகுதி மிகவும் அவசியம். ரவிச்சந்திரன் அஸ்வின் 30 ஓவர்களில் இருந்து 40 ஓவர்கள் ஒரு நாளில் வீசினாலும் கூட, அடுத்த நாள் மீண்டும் வந்து பந்துவீசும் பொழுது அதே தீவிரத்துடன் வீசுவார். உடல் தகுதியில் நான் பார்த்து சிறந்தவர்களில் அவரும் ஒருவர்.

- Advertisement -

நாங்கள் கிரிக்கெட் குறித்து பேசி பழகி நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம். ஆனால் கிரிக்கெட் குறித்த எந்த விவாதத்திலும் அவருடன்பேசி நம்மால் ஜெயிக்க முடியாது. ஏனென்றால் அவர் கிரிக்கெட் குறித்து அவ்வளவு அறிவானவர். மேலும் சிறந்த கிரிக்கெட் சகோதரத்துவம் கொண்டவர். அவர் இப்படி இருப்பதற்கு காரணம் எப்பொழுதும் கற்றுக் கொள்ளும் மனதுடன் ஆர்வமாக இருப்பதுதான்.

ஒரு பேட்ஸ்மேனாக அவர் பெரிய தனிப்பட்ட ரன்களை எடுத்ததை விட, மிக முக்கியமான பார்ட்னர்ஷிப்பில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு அடிலைட் மைதானத்தில் தங்களது தொடரில் சிறப்பாக படுவதற்கான அடித்தளத்தை அமைத்தார்.

எனக்கு அஸ்வின் சம்பந்தப்பட்ட டெஸ்ட் போட்டிகள் என்று ஞாபகம் வரும் பொழுது, 2017பெங்களூரு, 2018 அடிலைட், 2021 மெல்போன் ஆகிய மூன்று போட்டிகளும்முக்கியமானதாக இருக்கிறது. இந்த மூன்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வந்தது என்பது சிறப்பு.

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. 112 வருடம்.. இந்தியாவின் கையில் அரிய சாதனை.. ரோகித்தின் இளம் படை சாதிக்குமா

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டை மிக வேகமாக கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளராக அஸ்வின் இருக்கிறார். தற்பொழுது நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடும் இந்திய வீரராக மற்றும் ஒரு குறிப்பிட தகுந்த அடையாளத்திற்கு தகுதியானவர். அவர் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சவாலை எதிர்கொள்ளவும், அணிக்காக கடினமான வேலைகளைச் செய்யவும் அவர் எப்பொழுதும் தயாராக இருந்திருக்கிறார். அவர் அதற்கு மிகவும் தகுதியானவர்” என்று கூறி இருக்கிறார்.