நடப்பு 17வது ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, ப்ளே ஆப் வாய்ப்பில் லக்னோ அணி முன்னணியில் இருந்தது. ஆனால் இரண்டாவது பகுதியில் மோசமாக விளையாடி, ப்ளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேறியது. இதுகுறித்து லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி 14 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகள் உடன் பிளே ஆப் வாய்ப்பை இழந்திருக்கிறது. மேலும் கூடுதலாக ஒரு போட்டியை வென்றிருந்தால் அவர்கள் தற்போது பிளே ஆப் ரேசில் இருந்திருப்பார்கள்.
மேலும் அவர்கள் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பகுதி தாண்டிக்கூட ப்ளே ஆப் வாய்ப்பில் மிகவும் வலிமையாக இருந்தார்கள். அந்த நிலையில் கே எல் ராகுல் நானூறு ரன்களை தொட்டு அணிக்கு நல்ல பங்களிப்பை வழங்கியிருந்தார். பிறகு டி20 உலகக்கோப்பை இந்திய அணி வெளியிடப்பட்ட பிறகு, அந்த அணியின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறும் பொழுது ” டி20 உலகக்கோப்பை இந்திய அணியின் தேர்வுக்கு பிறகு விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. எங்களுக்கு இரண்டு மோசமான ஆட்டங்கள் இருந்தது.அது எங்களுக்கு பெரிய விலையாக அமைந்து விட்டது. ஏப்ரல் மாதம் வரையில் நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடினோம்.
ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் தோல்வி அடைந்தோம். மேலும் காயம் காரணமாக நாங்கள் அணியில் சில முக்கிய பந்துவீச்சாளர்களை தவற விட்டோம். அது எங்களுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாதது வெட்கக்கேடான ஒன்று.
இதையும் படிங்க: பிளேசிஸ் இந்த விஷயத்துல சிரமப்படுறதா சொன்னாரு.. பழைய டீம் திரும்ப கூட வரலாம் – ருதுராஜ் பேட்டி
கேஎல்.ராகுல் மேம்படுத்த வேண்டிய பகுதி என்னவென்றால், அவர் சிறந்த 30 மற்றும் 40 ரன்கள் பெறுகிறார். பிறகு அதை அவரால் பெரிய அளவில் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது. மேலும் அவர் ஒரு நல்ல வீரர் என்பது மட்டும் இல்லாமல் நல்ல மனிதர் என்றும் நினைக்கிறேன். அவர் குறித்தான விமர்சனங்களை நான் கேட்டேன். ஆனால் இங்கு விளையாடுவதற்கு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.