90 ஓவர் 4 விக்கெட்.. சொல்லி அடிக்கும் இலங்கை.. சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணி திணறல்

0
109
Srilanka

தற்போது இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை அணியும் இரண்டாவது நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணியும் வென்று இருந்தன.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இன்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது.

- Advertisement -

இலங்கை அணியின் துவக்க ஜோடி 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை தந்தது. நிசான் மதுஷ்கா 16 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திமுத் கருணரத்தினே மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். திமுத் கருணரத்தினே 129 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 86 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்த ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் மற்றும் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இறுதியில் குசால் மெண்டிஸ் 150 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 93ரன்கள், ஏஞ்சலோ மேத்யூஸ் 71 பந்தில் 23 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்போது இலங்கை அணிக்கு களத்தில் தினேஷ் சண்டிமால் 34 (58), கேப்டன் தனஞ்செய டி சில்வா 15 (27) ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். பங்களாதேஷ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் ஹசன் மக்மூத் 2, ஷாகிப் அல் ஹசன் 1 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி இனிமே இத செய்ய வேண்டியது இல்லை.. வேற ரூட்ல பண்றார் – ஸ்டூவர்ட் பிராட் பேச்சு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே சில ஆண்டுகளாக நிறைய உரசல் போக்கு காணப்பட்டு வருகிறது. தற்பொழுது பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அவர்களது சொந்த மண்ணில், மூன்று தொடர்களில் இரண்டு தொடர்களை இலங்கைகைப்பற்றும் என்றால், அது பங்களாதேஷ் அணிக்கு பெரிய அடியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.