தோனி இனிமே இத செய்ய வேண்டியது இல்லை.. வேற ரூட்ல பண்றார் – ஸ்டூவர்ட் பிராட் பேச்சு

0
308
Dhoni

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றது.

இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் எளிதான வெற்றியை பெற்றது. இதன் மூலம் இரண்டு வெற்றிகள் உடன் பெரிய ரன் ரேட்டில் தற்பொழுது சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

- Advertisement -

சேப்பாக்கம் மைதானம் வழக்கம் போல் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லாமல் பேட்டிங் செய்ய சாதகமாக மாறி இருக்கிறது. மேலும் சிவப்பு மண் ஆடுகளத்தில் பழையபடி பவுன்ஸ் கிடைக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக உடனுக்குடன் அதிரடியாக மதிஷா தீக்ஷனா நீக்கப்பட்டு பதிரமா மற்றும் முஸ்தஃபிசூர் ரஹ்மான் என பிளேயிங் லெவனில் சிஎஸ்கே கொண்டு வந்திருக்கிறது.

இதன் காரணமாக ஆட்டத்தில் எல்லா பக்கத்திலும் பவுலர்களை ரொட்டேட் செய்ய கேப்டன் ருதுராஜுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. மேலும் பேட்டிங் யூனிட்டை எடுத்துக் கொண்டால் புதிதாக வாய்ப்பு பெற்ற ரச்சின் ரவீந்தரா 237 ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டுகிறார். இன்னொரு புறத்தில் டேரில் மிட்சல் பேட்டிங் செய்வதோடு பந்து வீச்சிலும் உதவி செய்கிறார். இதனால் தோனி பேட்டிங் செய்ய வர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கடந்த ஆட்டத்தில் கூட சமீர் ரிஸ்வி மற்றும் ஜடேஜா வர தோனி களம் இறங்கவில்லை.

இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறும் பொழுது “அவர் தற்போது சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர் கடந்த போட்டியில் இரண்டாவதாக அருமையான விக்கெட் கீப்பிங் வேலையை செய்து, தனது அணியினரையும், ரசிகர்களையும்சிறந்த முறையில் ஊக்கப்படுத்தி இருக்கிறார். களத்தில் அவர் இருக்கும் முறைக்கு நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா ஸ்டீவன் ஸ்மித் கூறும் பொழுது “தோனி 2.27 மீட்டர் தயவு செய்து அற்புதமான கேட்ச் ஒன்றை எடுத்தார். டேரில் மிட்சல் வேகம் குறைவாக வீசுவார் என்கின்ற காரணத்தினால் கொஞ்சம் முன்னே நின்றார். ஆனாலும் கூட பந்து எட்ஜ் எடுத்து வந்த பொழுது உடனடியாக ரியாக்ட் செய்து அபாரமாக அதைப்பிடித்தார். இது ஒரு பெரிய சிறந்த கேட்ச்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : நேற்று பேட் மட்டும் பரிசா கிடைக்கல.. முக்கியமா அது கிடைச்சது.. நன்றி விராட் பையா – ரிங்கு சிங் மெசேஜ்