ருதுராஜ் மாதிரி விராட் கோலி விளையாட கூடாதா?.. அவர மட்டும் ஏன் விமர்சனம் பண்றிங்க – அம்பதி ராயுடு பேட்டி

0
143
Virat

நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடிய பொழுதிலும் கூட, அவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியிலிருந்து உருவானது. இதுகுறித்து தற்போது அம்பதி ராயுடு பேட்டியளித்திருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி மொத்தம் 13 போட்டிகளில் 661 ரன்கள் குவித்திருக்கிறார். இவருடைய ஆவரேஜ் 66 என்று இருக்கும் நிலையில், ஸ்ட்ரைக் ரேட் 155 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த காலங்களில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 140 க்கும் கீழே இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் விராட் கோலி தற்போது சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முட்டி போட்டு அடிக்கும் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் காரணமாக சுழல் பந்துவீச்சாளர்களிடமிருந்து ரன்கள் அடிக்க முடியவில்லை என்கின்ற விமர்சனங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தற்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் பற்றியான விமர்சனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என பலரும் பேசி வருகிறார்கள். மிகக்குறிப்பாக இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆரம்பத்தில் இருந்து விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசக்கூடாது என தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் அம்பதி ராயுடு கூறும் பொழுது “ஸ்ட்ரைக் ரேட் என்பது கொடுக்கப்பட்ட ஆடுகளம் மற்றும் நீங்கள் விளையாடும் போட்டி சூழ்நிலையை பொறுத்தது என்று நான் நினைக்கிறேன். இதன் காரணமாக நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்க முடியாது. நீங்கள் உங்களுடைய வழக்கமான ஸ்ட்ரைக் ரேட்டில் 200 ரன்களை துரத்தும் போது விளையாடினால் 160 ரன்கள்தான் எடுக்க முடியும். அதுதான் விமர்சனத்திற்கு உள்ளாகக் கூடியது.

- Advertisement -

இதையும் படிங்க : KKR vs GT போட்டி மழையால் கைவிடப்பட்டது.. முதல் முறை குஜராத்துக்கு நடந்த பரிதாபம்.. பிளே ஆப் நிலவரங்கள்

நீங்கள் 140 ரன்கள் துரத்தும் பொழுது ருதுராஜ் விளையாடியபடி 40 பந்துகளில் 40 ரன்கள் கூட இருக்கலாம். அன்று அவர் விளையாடியது முக்கியமான ஒரு நாக் ஆகும். இதன் காரணமாகவே கலெக்டிவ் புள்ளி விவரங்களை கணக்கில் எடுக்கக் கூடாது. மேலும் இந்த ஆண்டு விராட் கோலி சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஸ்லாக் ஸ்வீப் விளையாடுகிறார். மேலும் உலகத்தில் எந்த கிரிக்கெட் வடிவத்திலும் விராட் கோலி விமர்சிக்கப்பட கூடாதவர்” என்று அவர் கூறியிருக்கிறார்.