277/3.. புது ஐபிஎல் வரலாறு.. ஆர்சிபி ரெக்கார்டு காலி.. மும்பை அணியை விளாசிய ஹைதராபாத்

0
115
SRH

2024 17வது ஐபிஎல் சீசனின் எட்டாவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் சன் ரைசர் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. ஹர்திக் பாண்டியாவின் இந்த முடிவு மிகவும் தவறானது என அடுத்த அரை மணி நேரத்தில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் காட்டினார்கள்.

இந்த முறை ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக உலகக் கோப்பை இறுதிப்போட்டி கதாநாயகன் டிராவிஸ் ஹெட் வந்தார். அவருடன் ஆட வந்த மயங்க் அகர்வால் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் இது ஆட்டத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. டிராவிஸ் ஹெட்டின் அதிரடி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை செய்வதறியாமல் செய்தது.

- Advertisement -

அதிரடியில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் அதிரடியாக அரை சதம் அடித்தார். இந்த அரை சதத்தில் அவர் மொத்தம் இரண்டு ரன்கள் மட்டுமே ஓடி எடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சன்ரைசர் ஹைதராபாத் அணி ஆறு ஓவர்களில் பவர் பிளேவில் 81 ரன்கள் எடுத்திருந்தது.

இதற்கு அடுத்து டிராவிஸ் ஹெட்டே பரவாயில்லை எனும் அளவுக்கு இந்திய இளம் வீரர் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டம் இருந்தது. இவர் வெறும் 16 பந்துகளில் அரை சதத்தை எட்டி, ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணிக்காக அதிவேக அரை சதம் அடித்தவர் என்கின்ற சாதனையை படைத்து, 23 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 10 ஓவர்களில் 148 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்றி கிளாசன் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள்.ஹைதராபாத் அணி 15 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. தொடர்ந்த இந்த ஜோடி விககெட்டை கொடுக்காமல விளையாட, 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது ஆட்டம் இழக்காத ஹென்றி கிளாசன் 34 பந்தில் 4 பவுண்டரி 7 சிக்ஸர்களுடன் 80 ரன், எய்டன் மார்க்ரம் 28 பந்தில் 2 பவுண்டரி உடன் 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் 270 ரண்களை முதலில் தொட்ட அணி என்கின்ற சாதனையும் ஹைதராபாத் அணிக்கு கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க : 10 ஓவரில் 148 ரன்.. அபிஷேக் ஷர்மா ஹெட் மெகா சாதனை.. ஹர்திக்கின் மும்பை பரிதாபம்

ஐபிஎல் தொடரில் அணியின் அதிகபட்ச ரன்
ஹைதராபாத் மும்பைக்கு எதிராக 277 ரன்கள்
பெங்களூரு புனேவுக்கு எதிராக 263 ரன்கள்
லக்னோ பஞ்சாப்புக்கு எதிராக 256 ரன்கள்
பெங்களூரு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 246 ரன்கள்
சென்னை ராஜஸ்தானுக்கு எதிராக 246 ரன்கள்

- Advertisement -