10 ஓவரில் 148 ரன்.. அபிஷேக் ஷர்மா ஹெட் மெகா சாதனை.. ஹர்திக்கின் மும்பை பரிதாபம்

0
277
SRH

இன்று ஐபிஎல் 17வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராகுல் திரிபாதி, யான்சன் மற்றும் நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டு, டிராவிஸ் ஹெட் மற்றும் உனன்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் இங்கிலாந்தின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் லூக் வுட் நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் 17 வயதான தென் ஆப்பிரிக்க அண்டர் 19 கிரிக்கெட் வீரர் க்வேனா மபாகா சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கும் படியே அமைந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று முதல் ஓவரை மபாகா வீசினார். இரண்டாவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 11 ரன்கள் தந்தார். மீண்டும் மூன்றாவது ஓவருக்கு வந்த மபாகா பந்துவீச்சை டிராவிஸ் ஹெட் நொறுக்கித் தள்ளினார். அந்த ஓவரில் மொத்தம் 22 ரன்கள் வந்தது. அங்கிருந்து ஹெட் உடைய தாக்குதல் நிற்கவேயில்லை.

தொடர்ந்து பேயாட்டம் ஆடிய டிராவிஸ் ஹெட் நடுவில் பும்ரா ஓவருக்கு மட்டுமே மரியாதை தந்தார். அவரைத் தவிர பந்து வீச்சுக்கு யார் வந்தாலும் சிக்ஸரும் பவுண்டரிமாக விளாசி தள்ளினார். மொத்தம் 18 பந்துகளை மட்டுமே சந்தித்த ஹெட் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் எடுத்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதில் அவர் ஓடி எடுத்தது இரண்டு சிங்கிள் ரன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் இரண்டு முறை 20 பந்துகளில் அரை சதம் அடித்தது அதிரடியாக அடிக்கப்பட்ட அரை சதமாக இருந்தது. தற்போது அதை ஹைதராபாத் அணிக்காக விளையாடும் முதல் போட்டியிலேயே ஹெட் முறியடித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மயங்க் அகர்வால் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பவர் பிளேவில் மொத்தமாக 81 ரன்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. டிராவிஸ் ஹெட் கடைசியாக 24 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 258 என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : துபே இன்னும் 3 ஆட்டம் மட்டும் இப்படியே விளையாடு.. அந்த ஜாக்பாட் அடிக்கும் – சேவாக் மெசேஜ்

ஆனால் இதற்குப் பிறகு வந்த இந்திய இளம் வீரர் அபிஷேக் ஷர்மா டிராவிஸ் ஹெட்டை மிஞ்சும் வகையில் விளையாடி வெறும் 16 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் அரை சதத்தை அடித்து மிரட்டினார். ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்தவர் என்கின்ற ஹெட்டின் சாதனையை உடனுக்குடன் உடைத்து தள்ளினார். மேலும் 10 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 148 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கிறது.