வீடியோ: அரங்கம் அதிர்ந்த தோனி என்ட்ரி.. கிளாசன் மார்க்ரம் சிறப்பு மரியாதை.. ரசிகர்கள் நெகழ்ச்சி

0
16253

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும் ஹைதராபாத் ரசிகர்கள் எம்எஸ் தோனிக்கு அளித்த வரவேற்பு குறித்து ஹைதராபாத் அணி வீரர்கள் தங்களது வியப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.

மகேந்திர சிங் தோனி என்ற பெயர் ஐபிஎல்லின் அடையாளமாகவே மாறிவிட்டது என்று சொன்னால் அது முற்றிலும் உண்மையே. ஒரு ஐபிஎல் அணி அதன் சொந்த மைதானத்தில் விளையாடினால் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பது இயல்பு. ஆனால் சென்னை அணி இந்தியாவில் எங்கு விளையாடினாலும், மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த ரசிகர்களை அதிகம் காண முடிகிறது. அந்த அளவிற்கு சென்னை அணியின் மீதும் மகேந்திர சிங் தோனியின் மீதும் ரசிகர்கள் அளவு கடந்த அன்பினை வைத்துள்ளனர்.

- Advertisement -

நேற்று ஹைதராபாத் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்து இருந்தது. சிவம் தூபே அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் டாரி மிச்சல் ஆகியோர் விளையாட மிச்சல் 13 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதற்குப் பின்னர் கடைசி ஓவரில் மகேந்திர சிங் தோனி களமிறங்கும் போது, மைதானமே “தோனி தோனி” என்று ரசிகர்கள் ஆரவாரத்தில் அதிர்ந்தது. ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் களமிறங்கிய தோனி கடைசி ஓவர் என்பதால் இரண்டு பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு ஒரு ரன் அடித்தார். இருப்பினும் அவரது என்ட்ரிக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக சன்ரைசர்ஸ்ன் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறி இருக்கிறார்.

தோனிக்கு கிளாசன் மார்க்ரம் சிறப்பு மரியாதை

மேலும் சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான ஹென்றிக் கிளாசன் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் மகேந்திர சிங் தோனிக்கு சிறப்பான பாராட்டை தெரிவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இதில் ஹென்றிக் கிளாஸன் கூறும் பொழுது
“இந்தியாவில் விளையாட்டை பொருத்தவரை தோனி ஒரு புராணக் கதையாக போகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து மற்றொரு சன்ரைசர்ஸ் அணி வீரரான எய்டன்மார்க்ரம் கூறும் பொழுது
“அவர் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருக்கும் தகுதியை இன்னமும் பெற்றுள்ளார்” என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே பல முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மகேந்திர சிங் தோனியை புகழ்ந்து வரும் வேளையில் எதிரணி வீரர்களே தற்போது தோனியை பாராட்டி பேசி இருப்பது ரசிகர்களிடையே அதிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகமாக வைரல் ஆக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டி20 உலக கோப்பைக்கு டிக்கெட் போடுங்க.. சிவம் துபேவால் அவங்க 4 பேருக்கு சிக்கல்தான் – சேவாக் மற்றும் யுவராஜ் பாராட்டு

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை அடைந்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் தன்னுடைய இரண்டாவது தோல்வியை பதிவு செய்திருக்கிறது சென்னை அணி.