நேபாள்கிட்ட அடி வாங்கி இருப்போம்.. நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் – தெ.ஆ கேப்டன் மார்க்ரம் பேச்சு

0
43
Markram

நடப்பு டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு கத்துக்குட்டி அணியான நேபாள் அணி இன்று பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். ஒரு வழியாக தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தப்பியது. வெற்றிக்குப் பிறகு பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் கவலைத் தெரிவித்திருக்கிறார்.

இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நேபாள் பந்து வீசியது. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியால் ஏழு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் ரீஷா ஹென்றிக்ஸ் தாக்குப் பிடித்து விளையாடி 43 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஆசிப் ஷேக் 42 ரன்கள் எடுத்தார். கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருக்க கடைசி ஓவரில் நேபாள் அணிக்கு எட்டு ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரில் முதல் நான்கு பந்தில் ஆறு ரன் எடுத்த அந்த அணிக்கு இரண்டு பந்தில் இரண்டு ரன் தேவைப்பட்ட நிலையில், மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் தோல்வியடைந்தது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் கடைசி நேரத்தில் நேபால் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்து வரலாற்று வெற்றியைக் கோட்டைவிட்டது. தென் ஆப்பிரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தாலும் கூட, கத்துக்குட்டி அணியிடம் தோல்வி அடைந்து இருந்தால் அவர்களுக்கு பெரிய நம்பிக்கை இழப்பாக அமைந்திருக்கும்.

போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் “இன்று இரவு வெற்றி பெற்றதற்கு மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். இன்று நாங்கள் எங்களுடைய திறமையில் இருந்து வெகு தூரத்தில் இருந்தோம், சிறப்பாக விளையாடவில்லை. அடுத்த சில நாட்களில் பெரிய போட்டிகள் பற்றி நினைத்தால் நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். எங்களிடம் நல்ல ஃபாஸ்ட் பௌலிங் யூனிட் இருந்தது. சரியான இடத்தில் பந்து வீசினால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் நான் கூடுதலாக ஒரு சுழல் பந்துவீச்சாளரை சேர்க்காமல் தவறு செய்து விட்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கு திடீர் பின்னடைவு.. நட்சத்திர வீரர் காயத்தால் விலகல்.. மாற்றுவீரர் அறிவிப்பு

முதலில் நேபாள் அணி பந்து வீசிய விதம் எங்களுக்கு மிகவும் கடுமையாக இருந்தது. அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து சிறப்பான அழுத்தத்தை கொடுத்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் எங்களுடைய திட்டங்களில் நம்பிக்கை இல்லாமல் செய்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.