கடைசி ஓவர் 5 ரன்.. 10 வருடம் கழித்து தெஆ செமி பைனலுக்கு தகுதி.. வெ.இ சோகமாக வெளியேறியது

0
399
T20iwc2024

இன்று டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கு காலிறுதிப் போன்ற போட்டியில் ஆண்டிகுவா மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் அவர் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரன் ஒரு ரன் மட்டுமே எடுத்து மார்க்ரம் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் கையில் மேயர்ஸ் 34 பந்தில் 35 ரன்கள், ரோஸ்டன் சேஸ் 42 பந்தில் 52 ரன்கள், ரசல் 9 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஷம்சி 4 ஓவர்களுக்கு 27 ரன் தந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து மழை பெய்த காரணத்தினால் 17 ஓவருக்கு 123 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் இரண்டு பவுலர்கள் நான்கு ஓவர்கள் பந்து வீசலாம். ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக நன்றாக மாறியது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயிண்டன் 7 பந்தில் 12 ரன், ரீஸா ஹென்றிக்ஸ் கோல்டன் டக், மார்க்ரம் 15 பந்தில் 18 ரன், கிளாசன் 10 பந்தில் 22 ரன், டேவிட் மில்லர் 14 பந்தில் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து கடைசி ஐந்து ஓவர்களில் 30 பந்துகளுக்கு 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. கைவசம் ஐந்து விக்கட்டுகள் இருந்தது. களத்தில் ஸ்டப்ஸ் மற்றும் மார்க்கோ யான்சன் இருந்தார்கள். இதில் ஸ்டப்ஸ் 27 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. மெக்காய் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தையே மார்க்கோ யான்சன் சிக்சருக்கு அடித்து தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். கடைசிவரை நின்ற அவர் 14 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலியை வச்சு இந்த தப்ப பண்ணாதீங்க.. ஏன்னா இந்த 3 பேரால எல்லா காலத்திலும் சிறந்தவர்களா இருக்க முடியும்- ஆம்ப்ரோஸ் பேட்டி

தென் ஆப்பிரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. கடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.