மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுவதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணி பயிற்சிக்காக ஒரு முக்கியமான முடிவை எடுத்து அசத்தி இருக்கிறது.
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன. இந்த இரண்டு அணிகளும் இந்த மாதம் ஜூன் 11ம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன.
தென் ஆப்பிரிக்காவின் கடைசி போட்டி
இந்த நிலையில் இறுதிப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து கிளம்பி விட்டார்கள். மேலும் அவர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக அந்த கிரிக்கெட் வாரியத்தில் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் வடிவத்தில் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது. மேலும் இந்த இரண்டு போட்டிகளையும் தென் ஆப்பிரிக்க அணி வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிரடி அறிவிப்பு
இந்த சூழ்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டி ஜூன் 3ம் தேதி அருன்டெல் கேசில் சசக்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சச்சின் தோனிக்கு தந்த மரியாதை விராட்டுக்கு கிடையாதா.. அவரும் முகேஷ் குமாரும் ஒண்ணா?.. இந்திய ரசிகர்கள் கோபம்
சமீபத்தில் ஜிம்பாப்வே அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்தில் மோதியது. தற்போது தென் ஆப்பிரிக்கா அணி பயிற்சி பெறும் விதமாக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு அடிகளும் சர்வதேச டெஸ்ட் போட்டியில் கடைசியாக 2017 ஆம் ஆண்டு மோதி இருந்தன. இதில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.






