கோலியை வச்சு 17 வருஷம் கழிச்சு சாதிங்க.. சாம்சன் சொன்னது தான் சரி – சவுரவ் கங்குலி பேட்டி

0
2042
Ganguly

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் இந்த மாதம் 21ஆம் தேதி துவங்குகிறது. இதற்கு அடுத்து ஐபிஎல் தொடர் 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியுடன் முடிகிறது. இதைத்தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் ஒன்றாம் தேதி நடக்கிறது. இதுகுறித்து சில முக்கியமான கருத்துக்களை சவுரவ் கங்குலி பகிர்ந்திருக்கிறார்.

டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி குறித்தும், மேலும் தற்போது விராட் கோலியின் பேட்டிங் செயல்பாடு சிறப்பாக இருக்கும் நிலையில், அவரை டி20 உலக கோப்பையில் எப்படி பயன்படுத்த வேண்டும்? என்றும் சௌரவ் கங்குலி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று விராட் கோலி விரைவாக பேட்டிங் செய்ததில் காரணமாக 90 ரன்கள் கடந்தார். எனவே அவரை டி20 உலகக்கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்த வேண்டும். அவர் ஓபனராக வருவது சரி. அவரின் கடந்த சில ஐபிஎல் இன்னிங்ஸ்கள் அவர் சிறப்பாக இருப்பதை காட்டுகிறது.

17 ஆண்டுகள் கழித்து மீண்டும் டி20 உலக கோப்பையை வெல்லும் சக்தி கொண்ட ஒரு அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பேட்டிங் ஆழம் மற்றும் இல்லாமல் பந்து வீச்சும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக பும்ரா இருக்கிறார். மேலும் அக்சர், குல்தீப் மற்றும் சிராஜ் ஆகியோரின் அனுபவமும் சிறந்த கலவையாக இங்கு இருக்கும்.

டி20 கிரிக்கெட் மாறிவிட்டது. வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் நிறைய ரன்கள் டி20 கிரிக்கெட்டில் வரும். சமீபத்தில் சஞ்சு சாம்சன் சொன்னதை படித்தேன். டி20 கிரிக்கெட் பவர் கேமாக மாறப்போகிறது. மேலும் அங்கு பேட்ஸ்மேன் செட்டில் ஆக நேரம் எடுத்துக் கொள்ள முடியாது என அவர் சொல்லியிருந்தார். உண்மையில் டி20 கிரிக்கெட் அப்படித்தான் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் அடிச்சு சொல்றேன்.. கோலி பவுலிங் பண்ணா விக்கெட் கிடைக்கும்.. காரணம் இதுதான் – மனோஜ் திவாரி பேட்டி

இப்போது ஐபிஎல் தொடரில் 240 முதல் 250 ரன்கள் சாதாரணமாக பார்க்கிறோம். மேலும் டெல்லி மற்றும் ராஜஸ்தான் மதியம் போட்டியில் 40 ஓவரில் 26 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. இனி வருங்காலத்தில் ஒரு ஓவருக்கு ஒரு சிக்ஸர் என்கின்ற வீதத்தில் விளையாடப்படும். இந்தவிளையாட்டு இப்படித்தான் இருக்கிறது. மேலும் இம்பேக்ட் பிளேயர் விதி இதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது” என்று கூறியிருக்கிறார்.