நான் அடிச்சு சொல்றேன்.. கோலி பவுலிங் பண்ணா விக்கெட் கிடைக்கும்.. காரணம் இதுதான் – மனோஜ் திவாரி பேட்டி

0
30
Virat

டி20 கிரிக்கெட் பேட்டிங் அணுகுமுறை தற்காலத்தில் மிகவும் அதிரடியாக மாறியிருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் விராட் கோலியின் பேட்டிங் அணுகுமுறையும் அதிரடியாக மாறி இருக்கிறது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

நேற்று ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தது. இந்த போட்டியில் விராட் கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். மேலும் ஆட்டம் முழுவதும் அவர் அதிரடியாக விளையாடுவதற்கான நோக்கத்தை முழுவதுமாக கொண்டிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும்பொழுது ” நான் என்னுடைய ஜோசியக்காரரிடம் என் பொற்காலம் எப்பொழுது ஆரம்பிக்கிறது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் இனி பொற்காலத்திற்கான நேரம் கிடையாது. இது விராட் கோலியின் பிளாட்டினம் காலம் என்று கூறிவிட்டார். அந்த அளவிற்கு விராட் கோலியின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.

மேலும் விராட் கோலி பவுலிங் செய்ய வந்தால் நிச்சயம் அவரால் போட்டியில் ஒரு விக்கெட் ஆவது கைப்பற்ற முடியும். ஏனென்றால் அவர் பந்து வீசும் பொழுது ஒரு காலை தவறாக வைத்து பந்து வீசுவார். இதன் காரணமாக பேட்ஸ்மேன் கல் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அவருடைய ஃபீல்டிங்கை பாருங்கள். பஞ்சாப் கிங்ஸ் அணியின் மிக முக்கியமான வீரரான ஷஷாங்க் சிங் விக்கெட்டை சிறப்பான ரன் அவுட் மூலம் கைப்பற்றினார். இந்த பேட்ஸ்மேன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இந்த தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடியவர். ஆனால் விராட் கோலி களத்தில் ஒரு சிறுத்தைப் போலானவர்” எனக் கூறிபாராட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா தோனி கிடையாது.. அவர் பேச்சை மும்பை டீம்ல கேட்காத காரணம் வேற – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

தற்பொழுது ஆர்சிபி அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் என்று இருக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளையும் அந்த அணி வென்றால் மொத்தம் 14 புள்ளிகள் பெறும். மேலும் டெல்லி, லக்னோ, மற்றும் சிஎஸ்கே ஆகிய மூன்று அணிகளும், 14 புள்ளிகளுக்கு கீழாகவோ அல்லது 14 புள்ளிகளோ எடுத்திருக்கும் பொழுது, ஆர்சிபி அணி அவர்களை விட புள்ளிகள் மற்றும் ரன் ரேட்டில் அதிகமாக இருக்கும் பொழுது ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு ஆச்சரியப்படத்தக்க வகையில் முன்னேறும்!

- Advertisement -