“பொறுங்க எல்லாரும் தோனி ஆகிட முடியாது.. இந்த பையன் 3 ஃபார்மேட் விளையாடுவான்” – கங்குலி பேட்டி

0
174
Jaiswal

இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு இது மிகவும் முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர் இல்லாமல் இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடும் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருக்கின்றனர். இதற்கு அடுத்து இந்திய கிரிக்கெட்டை தாங்கிக் செல்லக்கூடிய வீரர்கள் இந்த தொடரில் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

எனவே இதன் காரணமாக இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அவர்கள் மேற்கொண்டு எந்தெந்த வீரர்களை தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து அழைத்துச் செல்ல வேண்டும் என கண்டறிந்து இருக்கிறார்கள்.

தற்போது இந்திய அணியின் டெஸ்ட் துவக்க ஆட்டக்காரரான இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஷ்வால் இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக உருவெடுத்திருக்கிறார். நான்காவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட துருவ் ஜுரல் இனி எல்லா வடிவத்திலும் இந்திய அணியில் இடம் பெறக்கூடிய வீரராக தெரிகிறார்.

இந்திய அணியின் இந்த வெற்றி குறித்தும், இளம் வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தனது கருத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது தோனி வேறு ரகமான சிறப்பான வீரர். துருவ் ஜுரலுக்கு திறமை இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் தோனி தோனியாக வருவதற்கு 20 வருடங்கள் ஆனது. எனவே அந்த வீரர் தொடர்ந்து விளையாடட்டும். சுழல் பந்து மற்றும் வேகத்திற்கு எதிராக அவர் விளையாடுவது, நெருக்கடியான சூழலில் அவர் காட்டும் மனோபாவம் ஆகியவை எனக்கும் பிடித்திருக்கிறது.

ஜெய்ஸ்வால் சிறப்பு திறமை வாய்ந்த வீரர். அவர் இந்திய அணிக்காக எல்லா வடிவத்திலும் விளையாடக்கூடிய திறனை பெற்று இருப்பதாக தெரிகிறார். மூன்று வடிவத்திலும் இந்திய அணிக்காக அவர் நிச்சயம் விளையாடுவார். நான் இவரை மிகவும் விரும்புகிறேன்.

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. 2 இந்திய ஸ்டார் பிளேயர்ஸ்.. ஒருவர் உள்ளே.. ஒருவர் வெளியே.. தமிழக வீரர் தேவைப்பட்டால் அழைப்பு

இந்தியாவை இந்தியாவில் வெல்ல முடியாது என்கின்ற எண்ணம் எப்போதும் மனதில் இருந்தது. இங்கிலாந்து இளம் திறமைகளைக் கொண்ட அழகான ஒரு அணி. இந்த தொடருக்கு முன்பாக இங்கிலாந்தின் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சர்வதேச அனுபவமே இல்லை. இந்தியாவிற்கு வரக்கூடிய எந்த பெரிய அணிகளிலும் இவ்வளவு அனுபவம் இல்லாத சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்க மாட்டார்கள்” எனக் கூறியிருக்கிறார்.