என்னோட வேலை முடிஞ்சதும் போயிடுவேன்.. இந்த வேலையை மட்டும் செய்ய மாட்டேன் – ஓய்வு பற்றி விராட் கோலி பேச்சு

0
459
Virat

இன்று உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய ஒரே பேட்ஸ்மேனாக விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார். மேலும் அவர் இதை பல காலமாக செய்து வருகிறார். இந்த நிலையில் கிரிக்கெட்டில் இருந்து தான் எப்பொழுது ஓய்வு பெறுவேன் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

நவீன கிரிக்கெட்டில், அதற்கான நவீன கிரிக்கெட் ஷாட்கள் எதுவும் இல்லாமல், மரபு ரீதியான கிரிக்கெட் ஷாட்களை விளையாடி ஒரு பேட்ஸ்மேன் இந்த அளவிற்கு வெற்றிகரமாக இருக்க முடியுமா? என்பதற்கு ஆச்சரியமான பதிலாக விராட் கோலி இருக்கிறார். அவர் குவித்த பல ஆயிரக்கணக்கான ரன்கள் மரபு முறையில் விளையாடப்பட்டு வந்தவை.

- Advertisement -

கோவிட் காலத்தில் அவருடைய பேட்டிங் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சரிந்திருந்தது. அதற்குப் பிறகு ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் வடிவத்தில் சதம் அடித்து திரும்பி வந்த அவரை, எந்த விஷயத்தாலுமே தடுக்க முடியவில்லை.

விராட் கோலி தொடர்ந்து 2022 டி20 உலக கோப்பை, 2023 ஐபிஎல் தொடர், 2023 ஆசியக் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2024 ஐபிஎல் தொடர் என அட்டகாசமான பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். மேலும் அவர் தற்போது டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கும் தேர்வாகி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தன்னுடைய ஓய்வு குறித்து பேசி இருக்கும் விராட் கோலி “ஓய்வு குறித்த சிந்தனை மிகவும் எளிமையானது. ஒரு விளையாட்டு வீரராக எங்களுடைய விளையாட்டு வாழ்க்கைக்கு ஒரு முடிவு இருப்பதை நான் உணர்கிறேன். நான் எப்பொழுதும் பின்னோக்கி வேலை செய்கிறேன். ஒரு குறிப்பிட்ட நாளில் இதை செய்யாமல் விட்டு விட்டோம் என்று என் வாழ்க்கையை நான் முடிக்க மாட்டேன். என்னால் அப்படி முடியாது. பின்னர் வருத்தப்படும்படி செய்ய மாட்டேன்.

இதையும் படிங்க: ஜெய்ஸ்வாலுக்கு இரட்டை மனது.. கோலி பக்கம் இந்த விஷயத்தை திருப்பி விட்டு விட்டார் – இர்பான் பதான் பேச்சு

என் வேலை முடிந்ததும் நானே போய் விடுவேன். என்னைஇன்னும் கொஞ்சம் பார்க்க மாட்டீர்களா? விளையாடும் பொழுது களத்தில் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -