5வது டெஸ்ட்.. 2 இந்திய ஸ்டார் பிளேயர்ஸ்.. ஒருவர் உள்ளே.. ஒருவர் வெளியே.. தமிழக வீரர் தேவைப்பட்டால் அழைப்பு

0
1865
ICT

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய பேட்டிங் யூனிட்டில் அதிகப்படியான இளம் வீரர்களை கொண்டு கேப்டன் ரோஹித் சர்மா வென்று அசத்தியிருக்கிறார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளை வென்று, இங்கிலாந்து அணி ஒரு போட்டியை மட்டும் வென்று இருந்த நிலையில், கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி மார்ச் மாதம் ஏழாம் தேதி இமாச்சல் பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் துவங்க இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்று விட்ட காரணத்தினால், இந்த முறை கடைசிப் போட்டியில் மிக தைரியமாக களமிறங்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டம் நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால், எல்லா போட்டிகளுமே முக்கியத்துவம் கொண்டதாக அமைகிறது.

இதன் காரணமாக இந்திய அணியில் நட்சத்திர வீரர்களுக்கு அதிகம் ஓய்வு கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே கிடைக்கக்கூடிய அனைத்து நட்சத்திர வீரர்களும் விளையாடியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

மூத்த வீரர்களின் கேப்டன் ரோஹித் சர்மா 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் எல்லா போட்டிகளிலும் விளையாடுவார். அதைத்தொடர்ந்து அவர் அப்படியே கேப்டனாக டி20 உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும். இருந்தாலும் அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் காயம் காரணமாக லண்டனில் தங்கி இருக்கும் கேஎல் ராகுல் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இருந்து ரூல்டு அவுட் செய்யப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக ரஜத் பட்டிதார் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவது நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு தரப்பட்ட நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புகிறார்.

இதுகுறித்து பிசிசிஐ தெரிவிக்கும் பொழுது “உடல் தகுதி பெறுவதை வைத்து ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பில் இருந்த கேஎல்.ராகுல் உடல் தகுதி பெறாததால் விலக்கப்படுகிறார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து, மேலும் தேவையானவற்றை பெறுவதற்கு லண்டன் மருத்துவ குழுவையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : “ICC என்னால முடியல.. இதுக்கு மட்டும் புது ரூல்ஸ் கொண்டு வாங்க” – ஸ்டீவ் ஸ்மித் புலம்பல் கோரிக்கை

வாஷிங்டன் சுந்தர் தற்பொழுது ரஞ்சித் தொடரில் அரை இறுதி விளையாடுவதற்காக தமிழக அணிக்கு பெருமை இருக்கிறார். தேவைப்பட்டால் அந்தப் போட்டி ஐந்தாம் தேதி முடிந்ததும், அவர் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார். முகமது சமி நல்ல முறையில் இருக்கிறார். அவருக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு செயல்முறை துவங்க இருக்கிறது” எனக் கூறப்பட்டிருக்கிறது.