கேஎல் ராகுல் குடும்பம் நண்பர்கள் ஐபிஎல் ஏலத்தை விட்டு வெளியில் வரணும்.. இத மட்டும் செய்யணும் – கங்குலி பேச்சு

0
142
Ganguly

தற்போது நிலையான பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் சிரமப்பட்டு வரும் கேஎல்.ராகுல் சாதிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது பெர்த் மைதானத்தில் முகாமிட்டு இந்திய அணி கடுமையான பயிற்சிகள் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சியில் முதல் நாளில் கேஎல்.ராகுல் கையில் காயம் அடைந்து வெளியேறினார். இருந்த போதும் மீண்டும் திரும்ப வந்து பயிற்சியில் ஈடுபடுகிறார். ரோகித் இல்லாத நிலையில் இன்னும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் உறுதியற்றதாகவே இருக்கிறது.

- Advertisement -

தனக்குத் தானே பேசிக் கொள்ள வேண்டும்

கேஎல்.ராகுல் குறித்து பேசி இருக்கும் கங்குலி தெரிவிக்கும் பொழுது “ஆமாம் அவர் தனக்கு தானே பேசிக் கொள்ள வேண்டும். அப்படி தனக்குத்தானே பேசி அவர் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ள வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டேதான் இருக்கும். தன்னம்பிக்கை ஏறி இறங்கும். அதை மீண்டும் கொண்டு வருவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்”

“எனக்கு தெரியும் அவரை லக்னோ அணி வெளியில் விட்டு விட்டது. மீண்டும் அவரை அவர்கள் வாங்குவார்களா? என்று தெரியாது. ஆனால் அவர் ஒரு சரியான ஐபிஎல் அணியை கண்டுபிடித்து தன்னுடைய மதிப்பை பெறுவார் என்று நான் நம்புகிறேன். ஆனால் இந்த மாதிரியான விஷயங்கள் வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கிறது”

- Advertisement -

குடும்பம் நண்பர்கள் ஐபிஎல்-யை விட்டு தள்ளி இருக்க வேண்டும்

மேலும் பேசிய கங்குலி கூறும் பொழுது “இந்திய டி20 அணியிலும் அதற்கு வெளியேவும் சிறப்பாக விளையாடக்கூடிய இளம் வீரர்களை கேஎல்.ராகுல் தொடர்ந்து பார்க்கிறார். மேலும் அவர் தென் ஆப்பிரிக்காவில் விளையாடியதை நாம் பார்த்தோம். அதே வழிக்கு அவர் மீண்டும் திரும்பி வரவேண்டும். எப்பொழுதும் யாராவது ஒருவர் தன்னை வந்து தேர்வு செய்வார்கள் என்று அவர் எதிர்பார்த்துக் கொண்டே இருக்க முடியாது”

இதையும் படிங்க : எங்க கிட்ட விராட் இதை செஞ்சா மட்டுமே தப்பிக்க முடியும்.. இல்லனா சிக்கிடுவாரு – மெக்ராத் கருத்து

“எனவே தனக்குள் முடிவு செய்து குடும்பம், நண்பர்கள், ஐபிஎல் அணி மற்றும் ஐபிஎல் மெகா ஏலம் என்பது போன்றவற்றில் இருந்து விட்டு வெளியேறி வர வேண்டும். அவர் தான் மீண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவு எடுத்து பயிற்சியில் ஈடுபட வேண்டும். கடந்த முறை கடுமையான சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்தார். அவரால் அப்படி மீண்டும் செய்ய முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -