ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் கிளன் மெக்ராத் அறிவுரை கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் மைதானத்தில் பல்வேறு விதமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஆரம்ப கட்டத்தில் இந்திய வீரர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். மேலும் அங்குள்ள பவுன்ஸ் அதிகமாக இருப்பதை எதிர்கொள்வதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள்.
திடீரென முக்கியமாக மாறிய விராட் கோலி
நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு விராட் கோலியை வைத்து மிகப்பெரிய அளவில் ஆஸ்திரேலியா மீடியாக்கள் விளம்பரம் செய்து வருகின்றன. அவர் ஏற்கனவே அங்கு சிறப்பாக விளையாடியிருப்பதால் ஆஸ்திரேலியாவிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே ஆஸ்திரேலியா மீடியாக்கள் விராட் கோலிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கின்றன.
இன்னொரு பக்கத்தில் விராட் கோலியை பற்றி ரிக்கி பாண்டிங் கூறிய கருத்துக்கு கம்பீர் தந்த பதில் பெரிய சர்ச்சையாக தற்பொழுது வரை சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக விராட் கோலியை சுற்றி நிறைய பேச்சுகள் இந்த தொடரில் சென்று கொண்டிருக்கின்றன. இதுவும் விராட் கோலிக்கு ஒரு பெரிய அழுத்தமாக மாறி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி இதை செய்ய வேண்டும்
இது குறித்து கிளன் மெக்ராத் கூறும்பொழுது “ஆஸ்திரேலியா அணியினர் விராட் கோலியை நோக்கி கடுமையாகச் சென்றால், அவருடைய உணர்ச்சிகளுடன் அவர்கள் சண்டையிட்டால் சிறிது நேரம் அங்கு பேசப்படக்கூடியதாக அமையும். மேலும் இதையெல்லாம் தூக்கி எறியவும் செய்யலாம்”
“அதே சமயத்தில் விராட் கோலி அழுத்தத்தில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். எனவே அவர் தொடரின் ஆரம்பத்தில் ரன் பெரிதாக எடுக்கவில்லை என்றால் அது அவருக்கு இன்னும் கூடுதல் அழுத்தமாக மாறிவிடும். எனவே தொடரின் ஆரம்பத்திலேயே ஏதாவது குறிப்பிடத்தக்க ரன்னை எடுக்க வேண்டும்”
இதையும் படிங்க : 55 பந்து 136 ரன்.. விளாசி தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்.. இங்கிலாந்து அணி ரன் குவித்தும் தோல்வி.. 4வது டி20
“விராட் கோலி மிகவும் உணர்வுவயப்பட்ட ஒரு வீரர் என்று நான் நினைக்கிறேன். அவர் மேல் நிலையில் இருக்கும்போது மேலே இருக்கிறார். அதுவே அவர் கொஞ்சம் கீழே இருக்கும் பொழுது இன்னும் கீழே இருக்கிறார். எனவே அவர் தொடரை சிறப்பாக ஆரம்பிப்பது அவருக்கு முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.






