“சர்பராஸ் கான் இந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. அவர விட்டுருங்க” – கங்குலி கருத்து

0
237
Ganguly

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதோடு, இந்த தொடரில் இளம் வீரர்களை அறிமுகப்படுத்தி, எதிர்கால இந்திய கிரிக்கெட்டுக்கு தேவையான சில வீரர்களை கண்டெடுத்து இருக்கிறது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் தரப்பில் இதுவரையில் நான்கு வீரர்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மேற்கொண்டு தேவ்தத் படிக்கல் அறிமுகமாவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

பேட்டிங்கில் அறிமுகமான சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் என இருவருமே பலரது கவனத்தை கவர்ந்த வீரர்களாக இருக்கிறார்கள். இதேபோல் வேகப்பந்து வீச்சில் ஆகாஷ் தீப் நல்ல புதிய வரவாக இருக்கிறார். இவர்களை இனி அடிக்கடி இந்திய கிரிக்கெட்டில் பார்க்க முடியும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இதில் சர்பராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் எவ்வளவு ரன்கள் முதல் தரப் போட்டியில் குவிக்க முடியுமோ அவ்வளவு ரன்கள் குவித்து இந்திய அணிக்கு தேர்வான வீரராக இருக்கிறார். துருவ் ஜுரல் திறமையின் அடிப்படையில் தேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர். ஆனால் சர்பராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் எடுத்து தேர்வான வீரர்.

சர்பராஸ் கான் ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கை ஐபிஎல் தொடரில் மிக அமோகமாக துவங்கியது. ஏபி.டிவில்லியர்ஸ், வெயில் போன்ற அதிரடி வீரர்கள் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. விராட் கோலி பாராட்டும் அளவுக்கான இன்னிங்ஸ் ஒன்றையும் விளையாடு இருந்தார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் அவர் விளையாடிய மாடர்ன் கிரிக்கெட் ஷாட்கள் அப்பொழுது பெரிய வீரர்கள் கூட விளையாடியது கிடையாது. இப்படி துவங்கியவர் ஐபிஎல் வாழ்க்கை கடைசியாக அவரை எந்த அணிகளும் வாங்காத நிலைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சர்பராஸ் கான் எந்த கிரிக்கெட் வடிவத்திற்கு சரியானவர் என்று பேசிய கங்குலி “நான் அவரை ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான வீரர் என்று பார்க்கிறேன். டி20 கிரிக்கெட் வடிவம் என்பது முற்றிலும் வேறு வகையானது. மேலும் ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் தரப் போட்டிகளில் ரன்கள் குவித்து வந்தவர்.

இதையும் படிங்க : “எங்களுக்கு அடுத்த அஸ்வின் கிடைச்சிட்டாரு.. இதை கொண்டாடுங்க.. 5வது டெஸ்ட் ஜெயிப்போம்” – மைக்கேல் வாகன் பேட்டி

அவருடைய ரன்கள் எல்லாமே சிவப்பு பந்தில் இருக்கின்றன. எப்பொழுதுமே மற்றவர்கள் சொல்வது போல நீங்கள் அடிக்கும் ரன்கள் உங்களை எப்பொழுதும் கைவிடாது. இதுதான் சர்பராஸ் கான் விஷயத்தில் நடந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.