“எங்களுக்கு அடுத்த அஸ்வின் கிடைச்சிட்டாரு.. இதை கொண்டாடுங்க.. 5வது டெஸ்ட் ஜெயிப்போம்” – மைக்கேல் வாகன் பேட்டி

0
311
Ashwin

இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில் தொடரை இந்தியாவிடம் இழந்திருக்கிறது.

இந்தத் தொடருக்கு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட பொழுது ஒட்டுமொத்தமாக ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் இங்கிலாந்து அணி தோற்று நாடு திரும்பும் என பெரும்பாலான கணிப்புகள் கூறியது.

- Advertisement -

இப்படியான நிலையில் இங்கிலாந்து அணி தன்னுடைய அதிரடியான பாஸ்பால் அணுகுமுறையில் விளையாடி முதல் டெஸ்ட் போட்டியில் வென்று இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் நாடுகளுக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

மேலும் இந்த முறை இங்கிலாந்து நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை மொத்தமாக இந்தியா கூட்டி வந்தது. அவர்களில் ஒருவர் மட்டுமே அனுபவம் வாய்ந்தவர். இன்னொருவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் மட்டுமே ஆகியிருந்தவர். மற்ற இருவரும் சர்வதேச கிரிக்கெட் மட்டுமில்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் பெரிதாக சிவப்பு பந்தில் விளையாடாதவர்கள்.

இப்படியான சுழற் பந்துவீச்சு கூட்டணியில், சர்வதேச மற்றும் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட் அனுபவமே இல்லாத டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பஷீர் இருவரும் மிகச் சிறப்பாக இந்திய அணிக்கு எதிராக பந்து வீசி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது ” இது இங்கிலீஷ் கிரிக்கெட்டுக்கு ஒரு மிகச் சிறந்த வாரம். இந்த சிறந்த வாரத்தில் நாம் ஒரு சூப்பர் ஸ்டார் வீரரை கொண்டாடுகிறோம். அவர்தான் சோயப் பசீர். அவர் அடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆக வருவார். அவர் இங்கிலாந்தின் புதிய சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டராக உருவெடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல்.. ஹர்திக் பாண்டியா அண்ணனை கழட்டிவிட்ட லக்னோ.. புதிய துணை கேப்டனை அறிவித்தது

தரம்சாலா மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என நான் நினைக்கிறேன். இங்கிலாந்து அணி போட்டியை பகுதி பகுதியாக பிரித்து விளையாடினால் சுலபமாக வெற்றி பெறக்கூடிய அணி. மேலும் இங்கிலாந்து அடுத்த போட்டியில் தொடரை வெல்வதற்காக விளையாட வேண்டியது இல்லை” எனக் கூறியிருக்கிறார்.