ரோகித் பேச்சுக்கு எதிர்ப்பா? இம்பேக்ட் பிளேயர் விதியை குறை சொல்லிக்கிட்டே இருக்க முடியாது – ஆவேஷ் கான் கருத்து

0
113
Rohit

நடப்பு ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய சொர்க்கமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் மிகவும் கடினப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் ஐபிஎல் தொடரில் சில விஷயங்களை குறை சொல்வதால் எதுவும் நடக்காது என ராஜஸ்தான் வீரர் ஆவேஷ் கான் பேசியிருக்கிறார்.

கடந்த வாரத்தில் ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இம்பேக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என்றும், அதனால் பவுலர்கள்மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றும், வெளிப்படையாகவே பிசிசிஐக்கு கோரிக்கை வைப்பது போல் பேசி இருந்தார்.

- Advertisement -

இவருக்கும் முன்பாகவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயர் விதியால் ஆல் கவுண்டர்கள் உருவாவது தடுக்கப்படும், சிவம் துபே வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் பாதிக்கப்படுவார்கள், எனவே இந்த விதி கட்டாயம் நீக்கப்பட வேண்டும் என்று பேசி இருந்தார்.

இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் எடுத்துக் கொண்டால் பவுண்டரி எல்லை சிறியதாக இருக்கிறது, மேலும் ஆடுகளும் தட்டையாக பேட்டிங் செய்ய சாதகமாக கொடுக்கப்படுகிறது. இத்தோடு இம்பேக்ட் பிளேயர் விதியும் சேர்வதால், முதல் பந்தில் இருந்தே பேட்ஸ்மேன் அடித்து நொறுக்குகிறார்கள். பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தில் எந்த பகுதியிலுமே இல்லாமல் இருப்பது போல இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஆவேஷ் கான் கூறும் பொழுது “ஆடுகளம், சிறிய பவுண்டரி எல்லைகள் மற்றும் இம்பேக்ட் பிளேயர் விதி ஆகியவற்றை நீங்கள் குறை சொல்லி கொண்டே இருக்க முடியாது. சாக்குப் போக்குகளை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தம் கிடையாது. என்னுடைய நல்ல பந்தில் ஒரு பவுண்டரி அடித்தாலும் எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : மக்களை கண்டுக்காத.. உனக்கு திறமை இருந்தா நீ இதை செய்னு கோலி சொன்னார் – சுப்மன் கில் பேட்டி

ஒரு பந்து வீச்சாளராக நீங்கள் உங்களை நம்பினால்தான், நீங்கள் 14 போட்டிகளிலும் பந்து வீச முடியும். ஆனாலும் நீங்கள் ரன்கள் கொடுக்க வேண்டியது வரும். ஆனால் அதை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து நீங்கள் முன்னேறி செல்ல வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் ஐபிஎல் தொடரில் நீடித்து ஒரு வீரராக நிலைத்திருக்க முடியும்” என்று அவர் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.