மக்களை கண்டுக்காத.. உனக்கு திறமை இருந்தா நீ இதை செய்னு கோலி சொன்னார் – சுப்மன் கில் பேட்டி

0
21
Gill

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் காலத்திற்குப் பிறகு விராட் கோலி மிகப்பெரிய நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்குப் பிறகு அந்த இடத்திற்கு சுப்மன் கில்தான் வருவார் என்று பலரும் கணித்திருக்கிறார்கள். இந்த நிலையில் விராட் கோலியை முதன் முதலில் சந்தித்தது பற்றி சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து கில் வழி நடத்திக் கொண்டு வருகிறார். ஒன்பது போட்டிகளில் 146 ஸ்ட்ரைக் ரேட்டில் கில் 34 ரன்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் அடித்திருக்கிறார். அதே விராட் கோலி 430 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் விராட் கோலி ஒரு முறை கூறியிருந்த பொழுது, ஒரு சீனியர் கிரிக்கெட்டராக அணியில் இருக்கும் இளம் வீரர்களுடன் நட்பாக இருந்து அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லி வழி நடத்துவது தான் தனது வேலை என்று தெரிவித்திருந்தார். இந்த வகையில் விராட் கோலிக்கும் கில்லுக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதை களத்தில் பார்க்க முடியும்.

மேலும் கில் இந்திய அணிக்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே, பயிற்சியில் அவர் பந்தை சந்தித்து விளையாடுவதை போல தன்னால் அந்த வயதில் விளையாட முடிந்ததில்லை என்று, கில்லை பெருமைப்படுத்தி மிகவும் பெருந்தன்மையாக பேசியிருந்தார். இந்த இரண்டு வீரர்களுக்கும் இடையேயான தொடர்பு, இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கில் விராட் கோலி பற்றி கூறுகையில் “நான் இந்திய அணிக்காக விளையாட நியூசிலாந்து சென்ற பொழுது முதல் முறையாக விராட் கோலி அவர்களுடன் பேசினேன். புதிய வீரர்கள் தங்களை நிரூபிப்பதற்கு சில வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என மக்கள் வெளியிலிருந்து பேசுகிறார்கள் என்று அவர் என்னிடம் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க: ஜாகிர் கானின் டி20 உலககோப்பை இந்திய அணி.. சாம்சனுக்கு இடமில்லை.. ஆர்சிபி வீரருக்கு இடம்

அதே சமயத்தில் அவர் தொடர்ந்து என்னிடம் கூறும் பொழுது, நீங்கள் நன்றாகவும் திறமையாகவும் இருந்தால், முதல் இன்னிங்ஸில் இருந்தே சிறப்பாக தொடங்கலாம். உங்கள் முதல் இன்னிங்ஸில் சதம் அடிக்கலாம். விராட் கோலி மிகவும் பாசிட்டிவ்வான ஒரு மனிதர். அவர் என்னிடம் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் என்னிடம் இருக்கும் திறமையை கண்டார். எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறுவார்” என்று தெரிவித்திருக்கிறார்.