எல்லா பவுலரும்தான் ரன் தராங்க.. நான் சரியா இல்லனா கூட என் டீம்ல இதை மட்டும் பாருங்க – மிட்சல் ஸ்டார்க் பேட்டி

0
154
Starc

நடப்பு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 24.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் மிட்சல் ஸ்டார்க் வாங்கப்பட்டார். ஆனால் அவருடைய ஆரம்ப கட்ட செயல்பாடு சிறப்பாக இல்லை. இதுகுறித்து நேற்று மும்பை அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வீழ்த்திய பிறகு பேசி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்கின்ற அடையாளத்தோடு கொல்கத்தா அணிக்கு இந்த சீசனை மிட்சல் ஸ்டார்க் ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட விலைக்கும், அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புக்கும் தகுந்தபடி அவரது பந்துவீச்சு அமையவில்லை. முதல் போட்டியிலேயே 50 ரன்களுக்கும் தாண்டி சென்றார்.

- Advertisement -

இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் அவரின் ஐபிஎல் விலை மற்றும் அவரது செயல்பாடு குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியில் இருந்தது. தொடர்ந்து சில போட்டிகளாக அவர் சரியாக செயல்படாத பொழுது இந்த விமர்சனங்கள் கேலிகளாக மாறின.

இந்த நிலையில் தான் அவர் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை 19வது ஓவரிலேயே முடித்து வைத்தார். மேலும் நேற்று அவர் மொத்தமாக நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இஷான் கிஷானை வெளியேற்றியதின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் சரிவை உருவாக்கினார்.

இதுகுறித்து மிட்சல் ஸ்டார்க் பேசும் பொழுது “பல பந்துவீச்சாளர்களும் ரன்களுக்கு இங்கு செல்லவில்லையா? நாங்கள் இரண்டாவது இடத்தில் தற்போது புள்ளி பட்டியலில் இருக்கிறோம். அதாவது நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். இது டி20 கிரிக்கெட் நீங்கள் விரும்பும் வழியில் விஷயங்கள் செல்லாது. நான் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாட விரும்பினேன் ஆனால் அது நடக்கவில்லை. அதனால் என்ன நாங்கள் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். இதுதான் முக்கியம், நீங்கள் இதை பாருங்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் கதையை முடிச்சிட்டாரு.. ஹர்திக்கை அவங்க கேப்டனாவே ஏத்துக்கல – இர்பான் பதான் விமர்சனம்

நான் அனுபவம் வாய்ந்தவன் கொஞ்சம் வயதானவன். நான் அதிக டி20 போட்டிகளில் விளையாடியது கிடையாது. அதே சமயத்தில் நாங்கள் சிறந்த டி20 பந்துவீச்சு குழுவை வைத்திருக்கிறோம்.அவர்கள் விளையாடிய போட்டிகளில் மிகப்பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். மேலும் மக்கள் என்ன பேச வேண்டும் என்று நான் கூற முடியாது. நான் கேள்விகளுக்கு பதில் சொல்லவும், என்னுடைய பயிற்சி மற்றும் திட்டங்களில் வேலை செய்யவும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.