டி20 உலகக் கோப்பை 2024

பைனலில் தோத்தா ரோகித் பார்படாஸ் கடலில் குதிக்கணும்.. ஆனா ஒரு காரணத்தால நம்பிக்கை இருக்கு – கங்குலி பேச்சு

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக பார்படாஸ் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை வெல்லும் என இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 10 ஆட்டங்களை வென்று இறுதிப் போட்டியில் தோற்றது. அது நடந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் ரோகித் மீண்டும் ஒரு இறுதி ஆட்டத்தில் தோற்க மாட்டார் என சவுரவ் கங்குலி நம்புகிறார்.

இது குறித்து சவுரவ் கங்குலி கூறும் பொழுது “ரோஹித்தின் இந்த நிலைக்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக கூட இல்லாத அவர், தற்பொழுது ஒரு போட்டியில் கூட தோற்காமல் டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக இந்திய அணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஐந்து ஐபிஎல் தொடர்களை வென்றது பெரிய சாதனை. இதனால் நான் சர்வதேச கிரிக்கெட்டை விட ஐபிஎல் தொடரை பெரிதாக சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அங்கு நிறைய போட்டிகளை வென்றால் மட்டுமே தொடர வெல்ல முடியும்.

உலகக் கோப்பை தொடரை வெல்வதில்தான் நிறைய பெருமை இருக்கிறது. ரோகித் இதை செய்வார் என நான் நம்புகிறேன். அவர் ஆறு மாத இடைவெளியில் இரண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைவார் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ஒன்று நடந்தால் அவர் பார்படாஸ் கடலில் குதிப்பார்.

- Advertisement -

ரோகித் சர்மா அணியை முன்னணியில் இருந்து வழி நடத்தி இருக்கிறார். கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அது நாளையும் தொடரும் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல தற்போது விளையாடிக் கொண்டு வரும்படி சுதந்திரமாக தைரியமாக தொடர்ந்து விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : உலகத்துக்கே கற்றுக் கொடுத்தது பாகிஸ்தான்.. ரோகித் எனக்கு புத்தி சொல்ல வேண்டாம்.. அம்பயர்கள் திருந்துங்க – இன்சமாம் பதிலடி

நாம் நாக் அவுட் போட்டிகளில் தோற்பதை வித்தியாசமாக பார்க்கிறேன். ஏனென்றால் நீங்கள் இறுதிப் போட்டிக்கு வந்தால் மட்டும்தான் கோப்பையை வெல்ல முடியும். இந்திய அணி கோப்பையை வெல்வதற்கான முயற்சியில் இறுதிப் போட்டி வரையில் வந்து கொண்டிருக்கிறது. இதுதான் இங்கு முக்கியமானது. இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.

Published by