டி20 உலகக் கோப்பை 2024

5 மடங்கு.. இந்திய அணிக்கு ஜெய் ஷா அறிவித்த மெகா பரிசுத்தொகை.. மிரண்ட கிரிக்கெட் உலகம்

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த நிலையில் கிரிக்கெட் உலகமே ஆச்சரியப்படும் அளவுக்கான பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிவித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி 2007ஆம் ஆண்டு முதல் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை வென்றது. இதற்கு அடுத்து ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அப்போது இருந்து 17 ஆண்டுகள் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரை வெல்லவில்லை.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்திய போதிலும், இந்திய கிரிக்கெட்டை ஐபிஎல் வளர்க்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதற்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை வெல்லாதது பெரிய விமர்சனமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அடுத்து டி20 உலக கோப்பை தொடரை இரண்டு முறை வென்ற அணியாகவும் இந்திய அணி மாறியிருக்கிறது.

- Advertisement -

இது இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிகப்பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணி மற்றும் நிர்வாகத்திற்கு சேர்த்து மொத்தம் 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருக்கிறார். ஐசிசி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கொடுத்தது 20.42 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட ஐந்து மடங்கு இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்து இருக்கிறது. இதைப் பார்த்து தற்பொழுது உலகக் கிரிக்கெட்டே மிரண்டு நிற்கிறது.

இதையும் படிங்க: ரோகித் கோலி சினிமாவையே மிஞ்சிட்டீங்க.. வாங்க 2 ஃபார்மட்ல பெருசா செய்யலாம் – கவுதம் கம்பீர் வாழ்த்து

இதுகுறித்து ஜெய் ஷா அறிக்கையில் கூறும் போது ” ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர் முழுவதிலும் இந்திய அணி சிறப்பான திறமை, உறுதி மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்தச் சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Published by