டி20 உலகக் கோப்பை 2024

ரோகித் கோலி சினிமாவையே மிஞ்சிட்டீங்க.. வாங்க 2 ஃபார்மட்ல பெருசா செய்யலாம் – கவுதம் கம்பீர் வாழ்த்து

நடத்த முடிந்த 9வது டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று கைப்பற்றியது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்கள். இரண்டு ஜாம்பவான் வீரர்களுக்கும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. மேற்கொண்டு ராகுல் டிராவிட் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. எனவே இந்திய அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை தேடியது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டருமான கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வருவது ஏறக்குறைய 99 சதவீதம் உறுதியான ஒன்றாக இருக்கிறது.

கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தால் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சமி ஆகியோர் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்வது கடினமாகும், கம்பீர் கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவர், எனவே இவர்கள் நீக்கப்படுவார்கள் என்கின்ற பேச்செல்லாம் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் கவுதம் கம்பீர் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் போது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் உலகக்கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்று இருக்கிறார்கள். எழுதப்பட்ட எந்த ஸ்கிரிப்ட்டையும் விட எதிர்பாராமல் நடந்த இது மிகச் சிறப்பான ஒன்று. இருவருமே மிகச் சிறந்த வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்கள். நான் அவர்களை வாழ்த்துகிறேன், அவர்களுக்கான எல்லா நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க : உறுதியான குதிரை போல.. என் கனவு நனவாகி இருக்கிறது.. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுகிறேன் – ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு

அவர்கள் உலகக் கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்ற போதிலும் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார்கள். அவர்கள் நாட்டிற்கும் அணிக்கும் தொடர்ந்து சிறப்பாக பங்களிப்பு செய்வார்கள்” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Published by