டி20 உலகக் கோப்பை 2024

நீங்க ரெண்டு பேரும் அனுபவிச்ச அந்த வலி எனக்கு நல்லா தெரியும்.. பெருமை படுத்திட்டீங்கப்பா – ரோகித் கோலிக்கு சச்சின் வாழ்த்து

நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டிக்கு பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் அறிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

2007ஆம் ஆண்டு ஐசிசி முதல் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தியது. அந்த முதல் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ரோஹித் சர்மா தற்போது ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடர் வரை தொடர்ந்து விளையாடி இருக்கிறார். விராட் கோலிக்கு இது ஆறாவது டி20 உலகக் கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இரண்டு மூத்த வீரர்களும் இளம் வீரர்களுக்கு இந்திய டி20 கிரிக்கெட்டில் வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் “விராட் கோலி, ஆறு உலகக் கோப்பைகளில் விளையாடி கடைசியாக அதை வென்று அனுபவம் எனக்கு மிக நன்றாக தெரிந்த ஒரு அனுபவம். நீண்ட வடிவத்திலான உலகக் கோப்பைகளை நீங்கள் இந்திய அணிக்காக விளையாடி தொடர்ந்து வெல்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

- Advertisement -

ரோகித் சர்மா நீங்கள் நம்பிக்கைகுரிய இளைஞராக இருந்து உலக கோப்பையை வென்றதை நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். உங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான திறமை தேசத்திற்கான மகத்தான பெருமைகளைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ரோகித் கோலி சினிமாவையே மிஞ்சிட்டீங்க.. வாங்க 2 ஃபார்மட்ல பெருசா செய்யலாம் – கவுதம் கம்பீர் வாழ்த்து

மேலும் இவர்களுடன் இன்னொரு மூத்த வீரரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அடுத்து 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த மூத்த வீரர்கள் யாரும் விளையாடாமல் இளம் அணி களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by