உலகத்துக்கே கற்றுக் கொடுத்தது பாகிஸ்தான்.. ரோகித் எனக்கு புத்தி சொல்ல வேண்டாம்.. அம்பயர்கள் திருந்துங்க – இன்சமாம் பதிலடி

0
1287
Rohit

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதி கொண்ட போட்டியில் இந்திய அணி ஏதாவது வகையில் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்கு ரோகித் சர்மா காட்டமாகப் பதில் அளிக்க, அதற்குத் திருப்பி மீண்டும் இன்சமாம் பதில் கூறியிருக்கிறார்.

முதலில் இது பற்றி பேசியிருந்த இன்சமாம் பந்து 15 வது ஓவரிலேயே அர்ஸ்தீப் சிங் வீசும் பொழுது ரிவர்ஸ் ஸ்விங் ஆனது, பந்து பழையதாகாமல் அல்லது பந்து சேதமாகாமல் இப்படி ஆவதற்கான வாய்ப்புகளே கிடையாது, எனவே இந்திய அணி பந்தை ஏதாவது செய்திருக்கலாம், எனவே நடுவர்கள் கண்களை திறந்து பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்

- Advertisement -

மேலும் இதுவே பாகிஸ்தான் அணிக்கு இப்படி ஏதாவது நடந்திருந்தால் வெளியில் இருந்து நிறைய பேர் இதைப் பற்றி பேசி இருப்பார்கள். சில பெரிய அணிகள் என்று வரும் பொழுது நடுவர்கள் கண்களை மூடி கொள்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசி இருந்த ரோஹித் சர்மா வெப்பமான சூழ்நிலையில், வறண்ட ஆடுகளத்தில் விளையாடுவதால் வந்து சீக்கிரம் தேய்கிறது இதனால் ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது. நாங்கள் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தில் விளையாடவில்லை, எனவே குற்றச்சாட்டை வைக்கும் பொழுது கொஞ்சம் மூளையை பயன்படுத்தவும் என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

தற்பொழுது இதற்கு பதில் அளித்து இருக்கும் இன்சமாம் உல் ஹக் “முதலாவது விஷயம் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என ரோகித் சர்மா ஒத்துக் கொண்டிருக்கிறார். எனவே நாம் கவனித்தது சரி என்று அர்த்தம். என்ன மாதிரியான ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது? எவ்வளவு வெப்ப நிலை இருக்கிறது?என்பது ரோகித் சர்மா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ரிவர்ஸ் ஸ்விங்கை உலகுக்கு சொல்லிக் கொடுத்தது பாகிஸ்தான்.

- Advertisement -

இதையும் படிங்க : நாளை டி20 உ.கோ பைனல்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. துபே இடத்தில் சாம்சன் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு இருக்கா? – முழு அலசல்

பத்திரிகையாளர்கள் முதலில் தவறான கேள்வியை கேட்டார்கள். 15ஆவது ஓவரிலேயே பந்து இப்படி ஆகிறது எனவே நடுவர்கள் கண்களைத் திறந்து கவனிக்க வேண்டும் என்றுதான் நான் கூறினேன். ரோகித் சர்மா மனதை திறந்து வைத்துக் கொண்டு பேசுமாறு கூறினார், நான் நடுவர்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் மனதோடு கண்களையும் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.