ஹர்திக் இல்லனு எங்கள தப்பா எடை போடாதிங்க.. 1,20,000 பேர் எங்க மைதானத்தில் இருப்பாங்க – சுப்மன் கில் பேட்டி

0
68
Gill

இன்று ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் பரபரப்பான போட்டி நடைபெற இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் ஐபிஎல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இந்த போட்டி அமைந்திருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று இருக்கும் ஹர்திக் பாண்டியாவை, குஜராத் அகமதாபாத் மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரசிகர்கள் எவ்வாறு நடத்துவார்கள்? என்பது இன்று இரவு போட்டியில் தெரிந்து விடும். மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை விட குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மேல் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றி ஜூனியர் வீரரான சூரிய குமாரை கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் வைத்துக் கொண்டது. இந்த நிலையில் தனக்கு தெரிந்தவரான கேஎல் ராகுல் கேப்டனாக இருக்கும் லக்னோ அணிக்கு செல்ல இருந்ததாக ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் ஆசிஸ் நெக்ரா கேப்டன் பொறுப்பை வாங்கித் தருவதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அழைத்து வந்திருக்கிறார்.

இப்படி அவரைக் கொண்டு வந்ததோடு, ஒரு நல்ல அணியையும் ஏலத்தில் உருவாக்கித் தந்து, அந்த அணி கலந்து கொண்ட முதல் ஐபிஎல் சீசன் இடையே கோப்பையையும் வென்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவு உண்மையில் அணியினர், அணி நிர்வாகம், அணியின் ரசிகர்கள் என எல்லோரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருப்பதோடு கோபப்படவும் வைத்திருக்கிறது என்று கூறலாம்.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை அழைத்து வந்ததோடு நிற்காமல், அந்த அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுத்தது இன்னும் பெரிய சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. தற்பொழுது அவருக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணி ரசிகர்களிடமும் எதிர்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க: கில்லுக்கு கேப்டன் பொறுப்பை சீக்கிரம் தந்துட்டாங்க.. அவர் இப்படி நடக்கலனா கஷ்டம் – முகமது சமி பேட்டி

தற்பொழுது இது குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசும்பொழுது “குஜராத் அகமதாபாத் மைதானத்தில் கேப்டனாக இருக்கப் போவது எனக்கு அழகான நினைவுகள். என்னுடைய பயணத்திற்கு இது ஒரு உற்சாகமான தொடக்கம். ஒரு லட்சத்து இருபதாயிரம் ரசிகர்களுடன், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது அருமையானது. நீங்கள் நன்றாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது சமி என இருவரை மட்டும் பார்க்கிறீர்கள் என்றால், ஒரு அணியாகவும், பயிற்சியாளராகவும், வீரர்களை உருவாக்குவதிலும் நீங்கள் தவறி விட்டீர்கள் என்று அர்த்தம். சமி பாய் துரதிஷ்டவசமாக காயம் அடைந்தார். ஆனால் யாதவ் பாய் சிறந்தவர் அவர் எங்களுக்கான வேலையை செய்ய முடியும்” என்று நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.