கில்லுக்கு கேப்டன் பொறுப்பை சீக்கிரம் தந்துட்டாங்க.. அவர் இப்படி நடக்கலனா கஷ்டம் – முகமது சமி பேட்டி

0
73
Shami

இன்று ஐபிஎல் தொடரில் மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. அதே சமயத்தில் இரண்டாவதாக நடைபெற இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிதான் மிகவும் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஏனென்றால், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த அணியை விட்டு தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா சென்று இருக்கிறார். அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்தவகையில் இந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி குறித்து மிகவும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. களத்தில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இணைந்து எப்படி விளையாடுவார்கள்? என்பது ஒருபுறம் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.இன்னொரு புறம் குஜராத் அகமதாபாத் மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன மாதிரியான வரவேற்பை கொடுப்பார்கள்? என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா அணியை விட்டு சென்று விட்டதால், அடுத்து கேப்டன் பொறுப்புக்கு கேன் வில்லியம்சன் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இல்லையென்றால் ஆப்கானிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக இருக்கும் ரஷித் கான் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய எதிர்கால நட்சத்திரம் சுப்மன் கில்லுக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரால் இந்த பொறுப்பை சரிவர சமாளிக்க முடியுமா? என்பதும் கேள்வியாக இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக காயத்திற்கு ஊசி போட்டு விளையாடி தற்பொழுது அறுவை சிகிச்சை செய்து, ஐபிஎல் தொடரை தவறவிட்டிருக்கும் முகமது சமி இது குறித்து பேசும் பொழுது “நீங்கள் சொல்வது போல கேப்டன் பொறுப்பு கில்லுக்கு சீக்கிரம் வந்திருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரும் இதை எதிர்பார்த்து இருக்க மாட்டார். நானும் இதைத்தான் உணர்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒரு பொறுப்பு தற்பொழுது கிடைத்திருக்கிறது. நீங்கள் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இதையும் படிங்க : ரசல் அதிரடிக்கு காரணம்.. உங்களுக்கு பெருசா தெரியாத இந்த இந்திய வீரர்தான் – ஹைதராபாத் கோச் பேட்டி

மேலும் கில் ஐபிஎல் தொடரிலும் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும் கடந்த காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார். பொதுவாக நீங்கள் கேப்டன் என்பதற்காக அதிக சுமைகளை சுமக்க வேண்டியது இல்லை. சகஜமாக இருங்கள். எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும். உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது. உங்களுடைய பேட்டிங் மற்றும் அணியை எப்படி சமநிலையில் வைத்திருப்பது என்பதில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -