சுப்மன் கில் அதிரடி சதம்.. இந்திய அணி முன்னணி.. இங்கிலாந்து அணியின் நம்பிக்கை குறைகிறது

0
382
Gill

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மூன்றாவது நாள் ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி நேற்று இங்கிலாந்து அணியை விட 143 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி விக்கெட் இழப்பில்லாமல் 28 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற ரோகித் சர்மா 13வுடன் மற்றும் ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஆண்டர்சன் வசம் ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு மூன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைத்தது. இந்த முறை அதை அவர் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக அரை சதம் அடித்தார்.

இவருடன் இணைந்து நல்ல முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பையும் வீணடித்துக் கொண்டார். 29 பந்துகளை சந்தித்த அவர் பென் ஸ்டோக்ஸ் இடம் அருமையான கேட்ச் மூலம் வெளியேறினார்.

- Advertisement -

இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்பது தற்பொழுது கேள்விக்குறியாக உள்ளது. சர்பராஸ் கானுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவருக்கு அடுத்து கில் உடன் அச்சப்பட ஜோடி சேர்ந்து வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடித்து நல்ல நம்பிக்கையுடன் இருந்த கில் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

இதன் காரணமாக இந்திய அணியின் லீடிங் 300 ரன்களை தாண்டியது. மேலும் அணியின் ஸ்கோரும் இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களை தாண்டியது. இந்த ஜோடி சிறப்பான முறையில் விளையாடி வருகிறது.

தொடர்ந்து சிறப்பான முறையில் விளையாடிய கில் தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் மூன்றாவது சதத்தை பதிவு செய்ததோடு தன்னுடைய இடத்தையும் அணியில் உறுதி செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க : தப்பித்த கில்.. சிக்கிய ஸ்ரேயாஸ்.. அதிர்ஷ்டம் இல்லாத ரஜத் பட்டிதார்.. விறுவிறுப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட்

கில் மொத்தமாக 132 பந்துகள் சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் சதத்தை பூர்த்தி செய்தார். இன்றைய நாள் ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, தன்னுடைய இடத்தை அணியில் காப்பாற்றியதோடு, இந்திய அணியும் காப்பாற்றி இருக்கிறார்.