“உண்மைய சொல்லிடறேன்.. காலையில டிராவிட் சார்கிட்ட இதுதான் பேசினேன்” – சுப்மன் கில் பேச்சு

0
1388
Gill

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரராகவும் அடுத்த விராட் கோலியாகவும் 24 வயதான இளம் வீரர் சுப்மன் கில் பார்க்கப்படுகிறார். கடந்த வருடம் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வருடமாக அமைந்திருந்தது. மேலும் கடந்த வருடத்தில் அவருக்கு எல்லா விதமான சதங்களும் கிடைத்தது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் அடித்தார்.

இந்த நிலையில் கடந்த வருடத்தின் மத்தியில் பெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம் பெற்று இருந்த கில், டெஸ்ட் தொடரில் தன்னை மூன்றாவது வீரராக கீழே தானே இறக்கி கொண்டார். இது ஜெய்ஸ்வால் துவக்க வீரராக வருவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.

- Advertisement -

கில் எடுத்த இந்த முடிவு அங்கிருந்து ஜெய்ஸ்வாலுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. ஆனால் தில்லுக்கு மிகவும் மோசமானதாக மாறிவிட்டது. அங்கிருந்து மொத்தமாக 9 இன்னிங்ஸ்களில் அவரிடம் எந்தவிதமான பெரிய ஸ்கோரும் இல்லை.

குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின் முதல் 3 இன்னிங்ஸ்களில் அவர் ஆட்டம் இழந்த விதம் மிகுந்த ஏமாற்றத்தை இந்திய அணி நிர்வாகத்துக்கே கொடுத்தது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி தோற்க கில் சொதப்பல் பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம்.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் அவருக்கு வாழ்வா சாவா போட்டி போல அமைந்தது. மூன்று அவுட் வாய்ப்பிலிருந்து தப்பித்த அவர், அதைப் பயன்படுத்தி அதிரடியாக சதமும் அடித்து, தன்னுடைய இடத்தைக் காப்பாற்றி விட்டார். மேலும் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து விட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் அவருக்கு எப்படி அமைந்தது என்று கூறும்பொழுது ” ஒரே வரியில் சொல்வது என்றால் முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை இதயத்துடிப்பு ஒரே மாதிரிதான் இருந்தது. சதம் அடித்த பிறகும் கூட நான் அவ்வளவு பதட்டமாகத்தான் இருந்தேன்.

எனக்கு இது மிகவும் புதிய ஒரு அனுபவமாக அமைந்தது. இன்று காலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, பெவிலியனில் டிராவிட் சாரிடம் இதைப் பற்றி தான் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

மக்கள் நான் ஏன் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்கிறேன் என்று பேசுகிறார்கள். ஆனால் நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் மூன்று மற்றும் நான்காம் இடங்களில் விளையாடித்தான் மூன்று இரட்டை சதங்கள் அடித்து இருக்கிறேன். அதே சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்தில் விளையாடுவது என்பது முற்றிலும் வேறானது. நான் செய்த தவறுகள் மற்றும் கிடைத்த அனுபவங்கள் எல்லாவற்றுக்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன்.

இதையும் படிங்க :கே.எஸ்.பரத் தேவையா?.. இஷான் கிஷானுக்கு என்னதான் ஆச்சு?” – கோச் ராகுல் டிராவிட் பதில்

நான் சில இன்னிங்ஸ்களாக ஸ்கோர் செய்யவில்லை. இது வெளியில் இருந்து வந்த சத்தங்களால் ஏற்பட்டது அல்ல. என் மீது நானே வைத்திருக்கும் எதிர்பார்ப்பால் உருவானது. எனக்கு ஹைதராபாத்திலும் எங்கும் நான் எப்படி ஆட்டம் இழந்தேன் என்பது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இதனால் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். என்னுடைய எதிர்பார்ப்புகள்தான் இதற்கு காரணமாக இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.