“கே.எஸ்.பரத் தேவையா?.. இஷான் கிஷானுக்கு என்னதான் ஆச்சு?” – கோச் ராகுல் டிராவிட் பதில்

0
610
Dravid

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து, தனக்கு ஓய்வு வேண்டுமென்று கூறி, விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இசான் கிஷான் அணியை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியைத் தேர்வு செய்யும் பொழுது, இந்திய தேர்வு குழு இசான் கிஷான் பெயரை பரிசீலிக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் முதல் விக்கெட் கீப்பராக கேஎஸ்.பரத்தை தேர்வு செய்தது. மேலும் அதிரடியாக இரண்டாவது விக்கெட் கீப்பராக துருவ் ஜுரலை கொண்டு வந்தது. இதனால் இஷான் கிஷான் ஓரம் கட்டப்படுகிறார் என்ற செய்தி பரவியது. மேலும் அவர் உள்நாட்டுப் போட்டிக்குத் திரும்பி இந்தியாவுக்கு விளையாட வர வேண்டும் என டிராவிட் கூறியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் கேஎஸ்.பரத் பேட்டிங் செய்த விதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கோபப்படுத்தி இருக்கிறது. இது குறித்தும், இசான் கிஷான் நிலைமை குறித்தும் ராகுல் டிராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறும் பொழுது “கேஎஸ்.பரத் செயல்பாட்டின் மீது நான் ஏமாற்றம் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். ஏனென்றால்அது மிகவும் வலிமையான வார்த்தை. அணைக்குள் புதிதாக வருகின்ற வீரர்களுக்கு நாம் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். உண்மையாகவே அவர் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

அவர் உள்நாட்டு போட்டியில் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார். கடைசியாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அவர் சதம் அடித்திருக்கிறார். இதனால்தான் அவர் இந்திய அணிக்கு வந்தார். அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும்.

இஷான் கிஷான் என்று மட்டும் இல்லை எல்லோருக்கும் இந்திய அணிக்கு வருவதற்கு வழி இருக்கிறது. நாங்கள் யாரையும் புறக்கணிப்பதாக அர்த்தம் கிடையாது.

மீண்டும் அவர் விஷயம் சம்பந்தமாக பேச நான் விரும்பவில்லை. ஏற்கனவே இது பற்றி நான் தெளிவாக கூறி இருக்கிறேன். அவர் தனக்கு ஓய்வு வேண்டுமென்று கேட்டார், நாங்கள் அவருக்கு ஓய்வு கொடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இதையும் படிங்க : “ஜாக் கிரவுலி அவுட்டில் டெக்னாலஜி தப்பா இருக்கு” – பென் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டு

அவர் எப்போது தயாராக இருந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று நான் கூறவில்லை. நாங்கள் அவருடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர் இப்பொழுது உள்நாட்டு கிரிக்கெட் எதுவும் விளையாடவில்லை என்றால், அவ தாயாராகவில்லை என்றுதான் அர்த்தம். மேலும் நாங்கள் ரிஷப் பண்ட் காயம் குறித்தும் தகவல்கள் தெரிந்து வருகிறோம்” என்று கூறி வருகிறார்.