2018 ராகுல் டிராவிட் ஸார் சொன்னது.. அந்த வார்த்தை தான் என்னை வழி நடத்திட்டு வருது – சுப்மன் கில் பேட்டி

0
48
Gill

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று விட்டதால், சுப்மன் கில் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து அவர் பேசி இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை பிரிதிவி ஷா தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது. அப்போது அந்த அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் இருந்து வந்தார். மேலும் மிக முக்கியமாக அந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சுப்மன் கில் இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான வீரராக பல முன்னாள் வீரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் முதல் போட்டிக்கு முன்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆட்டமும் பாதிக்கப்பட்டது.

மேலும் அதற்கடுத்து அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய புள்ளி விபரங்கள் இல்லாமல் இருந்து வந்தது. இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கான விளிம்பில் இருந்தார். இப்படியான சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்ததோடு, நான்காவது டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமான ஒரு அரை சதம் அடித்திருந்தார். அந்த டெஸ்டு தொடரை மிகச் சிறப்பாக முடித்து இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரர் தான் என்பதை நிரூபித்தார்.

தற்பொழுது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தும் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் கேப்டன் பொறுப்பு அவருடைய தனிப்பட்ட பேட்டிங்கை பாதிக்காமல் இருப்பதும் அவருடைய பலத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியால் தான் இதில் இவ்வளவு பெரிய மாற்றம் வந்திருக்கு – அகர்கர் திடீர் பேச்சு

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தனக்கு கூறிய அறிவுரை பற்றி பேசிய சுப்மன் கில் “ராகுல் டிராவிட் சார் எப்பொழுதும் என்னுடைய ஆட்டத்தை நம்ப சொல்லுவார். சூழ்நிலைகளைப் பற்றி கவலைப்படாமல் நான் எப்படி தயாராகி வந்தேன் என்பதை நம்ப சொல்லுவார். இப்பொழுது வரை நான் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு தொடருக்கும் அந்த மனநிலையை வளர்த்துக் கொண்டுதான் சந்தித்து வருகிறேன். எனக்கு அவரின் இந்த அறிவுரைதான் மிகப்பெரிய உதவியாக அமைந்திருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.