விராட் கோலியால் தான் இதில் இவ்வளவு பெரிய மாற்றம் வந்திருக்கு – அகர்கர் திடீர் பேச்சு

0
154
Virat

தற்போது 17வது ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான பட்டியலில் விராட் கோலி 300-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் விராட் கோலி குறித்து இந்திய கிரிக்கெட்டின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சில முக்கியமான கருத்துகளை கூறியிருக்கிறார்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் ஆக வந்த விராட் கோலி, அந்த பேட்டிங் ஃபார்மை அப்படியே ஐபிஎல் தொடருக்கும் கொண்டு வந்திருக்கிறார்.ஆனாலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறித்து நிறைய விவாதங்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்பாகவே விராட் கோலி t20 உலக கோப்பை இந்திய அணிகள் தேர்வு செய்யப்பட மாட்டார் என்பது போன்ற விஷயங்கள் வெளியில் கிளப்பப்பட்டன. அவர் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற வேண்டுமா கூடாதா? என நிறைய விவாதங்கள் வெளியில் சென்றன. இப்படியான செய்திகளை யார் பரப்புகிறார்கள்? என்பதும் தெரியவில்லை.

மேலும் ஆர்சிபி அணிக்காக தற்பொழுது விளையாடி வரும் விராட் கோலி உலகமெங்கும் கிரிக்கெட்டை கொண்டு செல்வதற்காகவே தன்னை டி20 இந்திய அணியில் வைத்திருக்கிறார்கள் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதே சமயத்தில் தன்னால் இன்னும் டி20 கிரிக்கெட்டில் நிரூபிக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விராட் கோலி குறித்து திடீரென அஜித் அகர்கர் பேசும்பொழுது “விராட் கோலியை நீங்கள் எடுத்துக் கொண்டால், உடல் தகுதியில் உலக கிரிக்கெட்டில் ஒரு அளவுகோலை கொண்டு வந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவராக இருக்கிறார். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக அவர் உடல் தகுதியில் மிகுந்த தீவிரத்தை காட்டி வருகிறார். அவரைப்போன்றபோன்ற ஒருவர் உடல் தகுதிக்கு முன்மாதிரியாக இருக்கும்பொழுது, அது அவர் இருக்கும் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களிடமும் பரவுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த வருஷம் மும்பை இந்தியன்ஸ் போட்டிகளை பாதி மட்டும்தான் பார்த்தேன்.. மீண்டு வந்தது இப்படித்தான் – சூரியகுமார் பேட்டி

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் நாம் உடல் தகுதியில் மிகப்பெரிய வித்தியாசத்தை பார்த்து வருகிறோம். இளைஞர்களிடம் உடல் தகுதி குறித்து ஒரு புதிய கலாச்சாரமும் விழிப்புணர்வும் தற்பொழுது ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாக விராட் கோலி இருக்கிறார் என்பது உண்மை” என்று கூறியிருக்கிறார்.