திரும்ப வந்து கொண்டிருக்கும் அஷ்வின்.. எப்போது இணைவார்? பந்து வீச முடியுமா?.. பிசிசிஐ புதிய அறிவிப்பு

0
598
Ashwin

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மட்டும் இல்லாமல் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் ஒரு பெரிய சோதனையாகவே அமைந்திருக்கிறது.

முக்கிய வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை தவறவிட்டு இந்த தொடரை இந்திய அணி சந்திக்க வேண்டியதான சூழ்நிலையில் இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்து இருக்கின்ற காரணத்தினால் தொடரை வெல்ல வேண்டிய நெருக்கடி ரோகித் சர்மாவுக்கு மிக அதிகமாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 500 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார்.

ஆனால் நேற்று முன் தினம் இந்த சாதனையை நிகழ்த்தி சிறிது நேரத்திலேயே அவரது வீட்டில் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்கின்ற காரணத்தினால், உடனே போட்டியை விட்டு விலகி வீட்டிற்கு சென்று விட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக முக்கிய சுழல் பந்துவீச்சாளரை இழந்து இந்திய அணி இங்கிலாந்து அணி கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதை நேற்று இந்திய அணி நல்ல முறையிலே செய்து இருந்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று மாலைக்குள் இந்திய அணியில் வந்து இணைவார் என்று அதிகாரப்பூர்வமான தகவலை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறது.

இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் நான்காவது நாள் முடிவில் அல்லது ஐந்தாவது நாள் ஆரம்பத்தில் இருந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்து வீச ஆரம்பித்து விடுவார் என்பது இந்திய அணிக்கு மிகவும் பலம் சேர்க்கும் ஒரு விஷயமாக அமைகிறது.

இதையும் படிங்க : “இது சத்தியம்.. 2 வாரமா பாக்கறேன்.. இந்த பையன் கிரேட் பிளேயரா வரப் போறான்” – கெவின் பீட்டர்சன் நம்பிக்கை

மேலும் அவர் குடும்ப மருத்துவ அவசர சூழ்நிலை காரணமாக சென்று இருப்பதால் அவர் உடனே வந்ததும் வந்து வீசலாம் என தினேஷ் கார்த்திக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே கிரிக்கெட் விதிகள் இதற்கு தடையாக இருக்காது.