என்ன நம்பு.. கோல்டன் டக் நல்லது தான் – லக்னோ அர்சின் குல்கர்னிக்கு ருதுராஜ் மெசேஜ்

0
200

ஐபிஎல் தொடரின் 48வது கிரிக்கெட் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணிக்காக தனது அறிமுக போட்டியில் வாய்ப்பு பெற்ற அர்சின் குல்கர்னி கோல்டன் டக் ஆகி வெளியேறியதைத் தொடர்ந்து சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடும் ரோஹித் சர்மா இப்போட்டியில் நான்கு ரன்கள் அடித்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் ஆரம்பத்தில் இருந்தே பந்து நின்று பேட்டுக்கு வந்தது. இதனால் மும்பை அணி வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன இசான் கிசான் 36 பந்துகளில் 32 ரன்கள் குவிக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 10 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதற்குப் பிறகு கேப்டன் ஹர்த்திக் பாண்டியா முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேற, இதில் நெகல் வதேரா மட்டும் அதிகபட்சமாக 41 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி இறுதியாக 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. காயம் காரணமாக சில போட்டியில் விளையாடாமல் இருந்த மயங்க் யாதவ் வாய்ப்பு பெற்றாலும் மூன்று ஓவர்கள் வீசிய நிலையில் திரும்பவும் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதன் பிறகு இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு தனது அறிமுகப் போட்டியில் வாய்ப்புப்பெற்ற அரசின் குல்கர்னி கே எல் ராகுல் உடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். தனது முதல் பந்தை எதிர்கொண்ட நிலையில் எதிர்பாராத விதமாக நுவன் துஷாரா பந்துவீச்சில் எல்பிடபில்யூ முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

அர்சின் குல்கர்னிக்கு ருதுராஜ் மெசேஜ்

இவர் ஆட்டமிழந்து வெளியேறியதை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆன ருத்ராஜ் கெயிக்வாட் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அறிமுக போட்டியில் விளையாடுவதை வாழ்த்தும் விதமாக “வாழ்த்துக்கள். உன்னை நினைத்து சந்தோசமாகவும் மிகவும் பெருமையாகவும் உள்ளது. இது ஒரு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பம். கோல்டன் டக் ஆனதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். என்னை நம்பவும் இது ஒரு நல்வழிக்கான ஆரம்பம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: யாரையோ சந்தோசப்படுத்த.. ரிங்கு சிங்கை பலிகடா ஆக்கிட்டாங்க.. இது குப்பையான தேர்வு – ஸ்ரீகாந்த் விமர்சனம்

ருத்ராஜ் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோல்டன் டக் ஆனதை நிறுத்து வருத்தப்பட வேண்டாம் என்று கூறியதற்கான காரணம் ருத்ராஜூம் முதல் போட்டியில் சென்னை அணிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் போது கோல்டன் டக் ஆகி வெளியேறினார். அப்படி ஆரம்பித்த இவரது கிரிக்கெட் வாழ்க்கை தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மாறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அர்சினுக்கும் ஒரு நல்வாழ்க்கையின் ஆரம்பமாக இருக்கும் என்ற விதத்தில் கூறியிருக்கிறார்.